மாலத்தீவு யோகா தின நிகழ்ச்சியில் தாக்குதல்

மாலே (மாலத்தீவு­கள்): மாலத் தீவு­களில் அனைத்­து­லக யோகா தினத்­தை­யொட்டி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த நிகழ்ச்சி ஒன்­றில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் புகுந்து தாக்­கு­தல் மேற்­கொண்­டுள்­ள­னர்.

மாலத்தீவு­க­ளின் தலை­ந­கர் மாலே­யில் உள்ள விளை­யாட்டு அரங்­கம் ஒன்­றில் இந்­நி­கழ்ச்சி நடை­பெற்­றது. இந்­தி­யத் தூத­ர­கம் ஏற்­பாடு செய்த இதில் அர­சாங்க அதி­கா­ரி­கள், அர­ச­தந்­தி­ரி­கள் உள்­ளிட்ட 150 பேருக்­கும் அதி­க­மா­னோர் கலந்­து­கொண்­ட­னர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் பங்­கேற்­பா­ளர்­க­ளைத் தாக்­கி­ய­தா­க­வும் பொதுச் சொத்­து­க­ளைச் சேதப்­படுத்­தி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. யோகா­ச­னம் இஸ்­லா­மிய சம­யத்­தின் கொள்­கை­க­ளுக்கு எதி­ரா­னது என்ற கருத்­தைத் தெரி­விக்­கும் பல­கை­க­ளை­யும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் ஏந்­தி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. இஸ்­லாம், இந்­திய பெருங்­க­ட­லில் உள்ள மாலத் தீவு­க­ளின் அதி­கா­ர­பூர்வ சம­யம்.

கல­வ­ரத்தை அடக்­கும் நட­வ­டிக்­கை­க­ளைக் காவல்­து­றை­யி­னர் மேற்­கொண்­ட­னர். அதற்­குப் பிறகு அவர்­கள் கண்­ணீர் புகை­யை­யும் மிளகு தெளிப்­பா­னை­யும் பயன்­ப­டுத்­தி­னர்.

இச்­சம்­ப­வத்­தின் தொடர்­பில் ஆகக் கடைசி நில­வ­ரப்­படி ஆறு பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் ஃபாத்மா நாஷ்வா சொன்­னார்.தாக்­கு­தல் குறித்து காவல்­து­றை­யி­னர் விசா­ரணை மேற்­கொள்­ளத் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் மாலத் தீவு­க­ளின் அதி­பர் இப்­ரா­ஹிம் முகம்­மது சோலி தெரி­வித்­துள்­ளார்.

"இச்­சம்­ப­வத்தை மிகுந்த கவலை தரும் ஒன்­றாக நாங்­கள் வகைப்­படுத்­து­கி­றோம். இதற்­குப் பொறுப்­பா­ன­வர்­கள் விரை­வில் சட்­டத்­தின் முன்பு நிறுத்­தப்­ப­­டு­வர்," என்று அவர் டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டார்.

இந்­தத் தாக்­கு­த­லைப் பற்றி பலர் டுவிட்­டர் போன்ற சமூக வலைத்­த­ளங்­களில் தங்­க­ளின் கருத்­து­க­ளைத் தெரி­யப்­ப­டுத்தி வந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!