மலேசியாவில் உலகின் 2வது ஆக உயரமான கட்டடம்

உலகின் இரண்டாவது ஆக உயரமான கட்டடம் மலேசியாவில் கட்டப்பட்டு வருகிறது. ‘மெர்டேக்கா 118 கோபுரம்’ எனும் அந்தக் கட்டடம் கிட்டத்தட்ட 5 பில்லியன் ரிங்கிட் (1.55 பில்லியன் வெள்ளி) செலவில் உருவாகி வருகிறது. இதன் உயரம் 678.9 மீட்டர். 118 என்பது கட்டடத்தில் அமைந்துள்ள மாடிகளை குறிக்கிறது. இதன் கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடந்துகொண்டிருப்பதாகவும் அடுத்தாண்டு நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்த கட்டடம், மெர்டேக்கா விளையாட்டரங்கத்துக்கு அருகில் உள்ளது. உலகின் ஆக உயரமான கட்டடமாக துபாயில் உள்ள புர்ஜ் கஃலிபா திகழ்கிறது. அதன் உயரம் 830 மீட்டர். படம்: தி ஸ்டார்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!