தயார்நிலையில் ஹெலிகாப்டர்கள்

ஜகார்த்தா: சுமத்­திரா, கலி­மந்­தான் ஆகிய பகு­தி­களில் இருக்­கும் தீ மூளக்­கூ­டிய அபா­யம் அதி­கம் உள்ள ஆறு மாநி­லங்­க­ளுக்கு இந்­தோ­னீ­சியா 20க்கும் மேற்­பட்ட ஹெலி­காப்­டர்­க­ளைப் பணி­யில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ளது. சென்ற வாரம் சில காடு­க­ளி­லும் தோட்­டங்­க­ளி­லும் சிறிய அள­வில் தீ மூண்­ட­தைத் தொடர்ந்து முன்­னெச்சரிக்கை நட­வ­டிக்­கை­யாக ஹெலி­காப்­டர்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அந்­தத் தீயால் இந்த வட்­டா­ரத்­தில் மீண்­டும் புகை­மூட்­டம் ஏற்­படக்­கூ­டும் என்ற அச்­சம் தலைதூக்கியது. மழை, தீய­ணைப்பு நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றால் அத்­த­கைய சூழல் உரு­வா­க­வில்லை என்று ‘பிஎன்­பிபி’ எனப்­படும் இந்­தோ­னீ­சி­யா­வின் தேசிய பேரி­டர் தடுப்பு அமைப்பு கூறியது.

நிலை­மை­யைக் கண்­கா­ணிக்­க­வும் தேவைப்பட்டால் தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டிக்­க­வும் தனது ஹெலி­காப்­டர்­கள் பணி­யில் இறங்­கத் தயார்­நி­லை­யில் இருப்­ப­தாக தேசிய பேரி­டர் தடுப்பு அமைப்பு கூறி­யது. ரியாவ், ஜாம்பி, தென் சுமத்­திரா, மேற்கு கலி­மந்­தான், மத்­திய கலி­மந்­தான், தென் கலி­மந்­தான் ஆகிய பகு­தி­களில் ஹெலி­காப்­டர்­கள் தயார்­நி­லை­யில் இருப்­ப­தாக அமைப்பு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தது.

மேற்கு கலி­மந்­தான், சுமத்­திரா உள்­ளிட்ட பகு­தி­க­ளின் சில இடங்­களில் சென்ற வாரம் காட்­டுத்தீ மூண்­டது கண்­ட­றி­யப்­பட்­டது. துணைக்­கோளப் படங்­க­ளின் மூலம் அந்­தத் தக­வல் தெரி­ய­வந்­த­தாக ‘ஏஎஸ்­எம்சி’ எனும் ஆசி­யான் சிறப்பு வா­னிலை நிலை­யம் சொன்­னது. மேற்கு கலி­மந்­தான் பகு­தி­யில் சிறி­த­ளவு புகை­மூட்­டம் காணப்­பட்­ட­தாகவும் நிலை­யம் குறிப்­பிட்­டது.

எனி­னும், கடந்த வார இறு­தி­யில் புகை­மூட்­டம் தென்­ப­ட­வில்லை.சிங்­கப்­பூ­ருக்கு ஆக அரு­கில் இருக்­கும் ரியாவ் மாநி­லம் தொடர்ந்து மழைக்­கா­லத்தை எதிர்­நோக்­கி வருகிறது.

காட்டுத் தீ ஏற்படக்கூடிய இந்தோனீசிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!