மலேசிய பொதுத் தேர்தலுக்கு தயாராக அம்னோ அழைப்பு

கோலா­லம்­பூர்: அம்னோ கட்­சித் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி மலே­சி­யப் பொதுத் தேர்­தலை விரை­வில் நடத்­து­வ­தற்கு ஏது­வாக, நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்க அழைப்பு விடுத்­தார்.

நேற்று கோலா­லம்­பூ­ரில் நடந்த அம்னோ உறுப்­பி­னர்­க­ளின் கட்­சிக் கூட்­டத்­தில் 1,000த்திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர். பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் இதில் கலந்­து­கொள்­ள­வில்லை என்று மலாய் மெயில் செய்தி கூறு­கிறது. நஜிப்­பின் மனைவி ரோஸ்மா, மகன், மகள் ஆகி­யோ­ரும் கலந்து கொண்­ட­னர்.

அப்­போது பேசிய ஸாஹித், தானும் துணைத் தலை­வர் முக­மது ஹாச­னும் அம்னோ உயர்­மட்­டத் தலை­வர்­க­ளின் கூட்­டத்­தில் பொதுத் தேர்­தலை விரை­வில் நடத்­து­வது குறித்து பேசப் போவ­தா­கக் கூறி­னார்.

அம்னோ உயர்­மட்­டத் தலை­வர்­களின் கூட்­டம் நேற்று இரவு நடை­பெ­று­வ­தாக இருந்­தது. இதில் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் கலந்­து­கொள்­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

"எப்­போது வேண்­டு­மா­னா­லும் பொதுத் தேர்­தலை எதிர்­கொள்­ளத் தயா­ராக இருங்­கள். அம்னோ ஒரு நிலை­யான அர­சாங்­கத்தை அமைக்க விரும்­பு­வ­தால், பொதுத் தேர்­த­லுக்கு அழைப்பு விடுக்­கிறது.

"பாரி­சான் நே‌ஷ­ன­லின் வெற்றி, கட்­சிக்­கா­க­வும் நாட்­டின் முன்­னேற்­றத்­திற்­கா­க­வும் பாடு­பட்ட நஜிப்­பின் போராட்­டத்தை வலுப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கும்," என்­றார் அவர்.

மேலும் நஜிப்­பிற்கு அரச மன்­னிப்பு வழங்க கோரும் இயக்­கம் ஒன்றை கட்­சித் தொடங்­க­வுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

பக்­கத்­தா­னுக்­குச் சாத­கம்

இதற்­கி­டையே, மலே­சிய எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம், முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக் சிறை சென்­றுள்­ளது அவ­ரது பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணிக்குச் சாத­மா­க அமையும் என்று எதிர்­பார்க்­கி­றார். இது அவ­ரது கடை­சிப் பொதுத் தேர்­த­லாக இருக்­கும் என்ற எதிர்­பார்ப்­பும் நில­வு­கிறது.

நஜிப் மீதான மற்ற குற்­றச்­சாட்டு வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தால், அவ­ருக்கு விரை­வில் அரச மன்­னிப்பு வழங்­கு­வ­தற்­கான வாய்ப்­புக் குறைவு என்­றும் அவர் சொன்­னார்.

நஜிப் சிறை சென்­றுள்ள நிலை­யில், பொதுத் தேர்­தலை விரை­வில் நடத்­து­வ­தற்­கான வாய்ப்­புக் குறைவு என்­றும் அவர் சொன்­னார்.

'50 விழுக்­காட்­டிற்கு மேல் கிடைக்­காது'

வரும் பொதுத் தேர்­த­லில் எந்­த­வொரு அர­சி­யல் கட்­சி­யா­லும் 50 விழுக்­காட்­டிற்கு மேற்­பட்ட இடங்­களைப் பெற­மு­டி­யாது என மலேசி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முக­மது தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

"இம்­முறை அதி­க­மான கட்­சி­கள் போட்­டி­யி­டு­கின்­றன. ஒவ்­வொரு கட்­சி­யும் தங்­கள் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் பிர­த­ம­ராக வர­வேண்­டும் என்று விரும்­பு­கின்­றன," என்­றார் அவர்.

பொதுத் தேர்­தலை எதிர்­கொள்­ளும் வகை­யில், அண்­மை­யில் வேறு சில சிறிய கட்­சி­க­ளு­டன் சேர்ந்து கிராக்­கன் தானா ஆயர் என்ற கூட்­ட­ணியை மகா­தீர் உரு­வாக்கி உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!