உக்ரேன்மீது படையெடுத்ததற்கு சீனா ஆதரவு: ர‌ஷ்யா தகவல்

கியவ்: உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்­த­தற்­குச் சீன மூத்த அதி­காரி ஒரு­வர் ஆத­ரவு தெரி­வித்­த­தாக ரஷ்யா கூறி­யுள்­ளது.

உக்­ரேன் நில­வ­ரங்­களை சீனா புரிந்­து­கொள்­வ­தா­க­வும் இந்த விவ­கா­ரத்­தில் ரஷ்­யாவை அது ஆத­ரிப்­ப­தா­க­வும் வெள்­ளிக்­கி­ழமை ரஷ்­யாவை சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் மூத்த சீன அதி­காரி கூறி­ய­தாக அந்­தக் கூட்­டத்­து­டன் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ர­பூர்வ ரஷ்ய தரப்பு தெரி­வித்­தது.

சீன கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூன்­றா­வது நிலை தலை­வ­ரான லி ஸாங்ஷு, ரஷ்­யா­வின் தூர­கி­ழக்கு நக­ரான விளா­டி­வஸ்­டாக்­கில் நடந்த பொரு­ளி­யல் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்­டார். ரஷ்ய அதி­பர் புட்­டினை சந்­தித்­தார். பிறகு அவர், சென்ற வாரம் மாஸ்­கோ­வுக்கு சென்­றார்.

விளா­டி­வஸ்­டாக்­கில் ரஷ்ய அதி­பரை சந்­தித்த சீனத் தலை­வர், அதி­பர் புட்­டினை பெரி­தும் பாராட்­டி­னார். எவ்­வ­ளவு தடை விதித்­தா­லும் மீள்­தி­ற­னு­டன் அதை ரஷ்யா சாதித்து இருக்­கிறது என்று சீனத் தலை­வர் கூறி­னார்.

மாஸ்­கோ­வில் ரஷ்ய தலை­மைத்­து­வத்­திற்கு தனது வலு­வான ஆத­ரவை சீனத் தலை­வர் தெரி­வித்­த­தாக மாஸ்கோ தரப்பு கூறி­யது.

அமெ­ரிக்­கா­வும் அதன் நேட்டோ நாடு­களும் ரஷ்ய எல்­லை­க­ளுக்கு அருகே விரி­வ­டை­யும் வேலை­களில் ஈடு­ப­டு­கின்­றன. இத­னால், ரஷ்­யா­வின் தேசிய பாது­காப்­பிற்­கும் அதன் மக்­க­ளின் வாழ்­விற்­கும் கடும் மிரட்­டல் விடுக்­கப்­ப­டு­வ­தாக சீனத் தலை­வர் கூறி­ய­தாக ரஷ்ய நாடா­ளு­மன்­றத் தரப்பு தெரி­வித்­தது.

தன்­னு­டைய முக்­கிய நலன்­க­ளைப் பாது­காக்க அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் ரஷ்யா எடுக்­க­வேண்டி இருக்­கிறது என்­பதை சீனா முற்­றி­லும் புரிந்­து­கொள்­கிறது என்­றும் ரஷ்­யா­வுக்கு உத­வி­களை அது வழங்­கு­வ­தா­க­வும் அந்­தச் சீனத் தலை­வர் கூறி இருக்­கி­றார்.

இத­னி­டையே, உக்­ரே­னின் வட­கி­ழக்­குப் பகு­தி­யில் அண்­மை­யில் உக்­ரேன் தரப்­பு­கள் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் அடைந்­தன.

உக்­ரே­னிய மூத்த அதி­கா­ரி­கள் அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளு­டன் வேவுத் தக­வல்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும் நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யதே இதற்குக் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ரஷ்­யா­வின் பல­வீ­னங்­க­ளைப் பற்றி சிறந்த முறை­யில் பொருத்­த­மான தக­வல்­களை அமெ­ரிக்கா உக்­ரே­னுக்­குத் தெரி­விக்க அந்த வேவுத் தக­வல் பகிர்வு திட்­டம் வழி­வ­குத்து இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சீன அதி­ப­ரான ஸி ஜின்­பிங் விரை­வில் கஸகஸ்­தான், பிறகு உஸ்­பெ­கிஸ்­தான் சென்று ரஷ்ய அதி­பரை அங்கு சந்­திப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக உக்­ரே­னின் ஸபோ­ரி­ஸியா அணு­சக்தி நிலை­யத்­தின் செயல்­பாடு முற்­றி­லும் நிறுத்­தப்­பட்டு ­விட்­ட­தாக அதற்கு பொறுப்பு வகிக்கும் எனர்­கோ­ட்­டம் நேற்று சொன்­னது.

ர‌ஷ்யாவும் உக்ரேனும் நடத்தி வரும் தாக்குதல்களால், அங்கு அணுசக்தி பேரழிவு ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!