எகிப்து-காஸா எல்லைப் பகுதி திறக்கப்படும் வாய்ப்பு

லண்டன்: மத்திய கிழக்கில் எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையில் இருக்கும் ராஃபா எல்லை புதன்கிழமை திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

அந்த எல்லைப் பகுதி புதன்கிழமை திறக்கப்படும். அதன் வழியாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் முதல் குழு காஸாவைவிட்டு வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

காஸாவில் சிக்கிக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் நாட்டவர்களுக்கு அந்த நாட்டின் குழுக்கள் ஏற்கெனவே உதவி வருகின்றன.

பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குள் உடனடியாகப் போக வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்து உள்ள 88 பாலஸ்தீனர்களும் சுமார் 500 வெளிநாட்டினரும் அந்த எல்லை வழியாக வெளியேறுவார்கள் என்று புதன்கிழமை எதிர்பார்க்கப்பட்டது.

எகிப்தில் இருந்து காஸாவுக்குள் புதன்கிழமை காலை நேரத்தில் மருத்துவ வாகனங்கள் நுழைந்தன.

எல்லையில் உள்ள கதவு பகுதியில் பலரும் கூடி இருந்தனர்.

காஸாவில் கைப்பேசி, இணையச் சேவைகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டு உள்ளன.

காஸாவில் நடக்கும் தரை மோதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் அறிவித்தது.

அக்டோபர் 7 முதல் 326 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகிவிட்டனர்.

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹாமாஸ் தாக்கியதைத் தொடர்ந்து காஸாவில் 11,000க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!