பேங்காக்: தாய்லாந்தில் கடுமையான டெங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாண்டு இதுவரை அந்நாட்டில் 8,000க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கி காரணமாக இதுவரை 13 பேர் மாண்டுவிட்டனர்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4,286 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டது.
இந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஜனவரி மாதம் 91.25 விழுக்காடு அதிகரித்தது.
கடந்த மாதம் 8,197 பேருக்கு டெங்கி காய்ச்சல் ஏற்பட்டது.