பினாங்கு மலைக்கான கம்பிவண்டித் திட்டப் பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும்

ஜார்ஜ்டவுன்: பினாங்கு மலைக்கான கம்பிவண்டித் திட்டம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ‘பினாங்கு ஹில் கார்பரேஷன்’ பொது மேலாளர் சியோக் லே லெங் தெரிவித்தார்.

திட்டத்துக்கான அடிக்கல் நடும் விழா அந்த மாதத்தில் நடைபெறும் என்றார் அவர்.

பிப்ரவரி 3ஆம் தேதி காலையில் மேம்படுத்தப்பட்ட பினாங்கு மலை நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

திட்டத்துக்குத் தேவையான ஒப்புதல்கள் அனைத்தையும் பெற்றுவிட்டதாக அவர் கூறினார்.

திட்டம் முடிவடையக் கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகும் என்றும் எளிதில் பாதிப்படையக்கூடிய மலைப் பகுதிகளைத் திட்டம் உள்ளடக்கி உள்ளதால் வானிலையைப் பொறுத்தும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் மூன்றாண்டுகளாக பினாங்கு மலை நிலையத்தில் நடந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு 10.9 மில்லியன் ரிங்கிட் (S$3,105,604) செலவானதாக அறியப்படுகிறது.

ஜனவரி மாதத்தில் பினாங்கு மலைக்கு 94,927 பேர் வருகை அளித்திருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!