மனந்தளராததால் அதிகாரியாக உயர்ந்தவர்

தேசி­ய சேவை தொடங்­கி­ய­தற்கு முன் 2.4 கிலோ­மீட்­டர் ஓட்­டத்தை நிறைவு செய்ய 20 நிமி­டங்­க­ளுக்கு மேல் எடுத்­துக்­கொண்­டார் இரண்­டா­வது லெப்­டி­னண்ட் குக­ன­வேல் அசோக்­கு­மார் (படம்). தற்­போது 20 வய­தான இவர், சிங்­கப்­பூர் ஆகா­யப் படை அதி­கா­ரி­யாக உயர்ந்­தி­ருக்­கி­றார். 

தேசிய சேவை­யில் சேர்­வ­தற்கு முன்­னர் குகன் தம் உடற்­தி­ற­னில் அதிக நாட்­டம் காட்­ட­வில்லை.  பள்­ளி­களில் நடத்­தப்­படும் நாப்ஃபா சோத­னை­யில் தோல்வி அடைந்­த­தால்  அடிப்­படை ராணுவ பயிற்­சியை 17 வாரங்­க­ளுக்கு மேற்­கொள்­ள­வேண்டி இருந்­தது. இருந்­த­போ­தும் இந்­தப் பயிற்­சி­யின் முடி­வுக்­குள் அவர், ஐபி­பிடி உடற்­தி­றன் சோத­னை­யில் வெற்­றி­ய­டைந்­தார்.

ஐபி­பி­டி­யில் சிறப்­பாக செய்ததால் தேசிய சேவை­யில்  அதி­காரி உள்­ளிட்ட பல சிறப்­பான பொறுப்­பு­களில் பணி­யாற்­றும் வாய்ப்பு கிடைக்­கும் என  தமக்­குப் பயிற்சி அளித்த சார்­ஜெண்ட் ஆலோ­சனை கூறி­ய­தாக குகன் தெரி­விக்கிறார்.

ஐபி­பி­டி­யில் வெள்ளி விரு­தி­னைப் பெற்­றார் குகன். ஓசி­எஸ் எனப்­படும் ராணுவ அதி­காரி பயிற்சிப் பள்ளியில் அவர் சேர்ந்­தார். ராணு­வத்­தில் எம்இ3 பொறி­யி­யல் அதி­கா­ரி­யாக இருக்­கும் தமது  தந்தை அளித்த ஊக்­கம், ராணுவ முகா­மில் கிடைத்த நல்ல நட்பு ஆகி­யவை குக­னுக்கு வெற்­றி­யைத் தந்­தது.  

இப்­போது  குக­னால் அடிக்­கடி பத்து கிலோ­மீட்­டர் தூரம்  ஓட முடி­கிறது. “இந்த முன்­னேற்­றத்­தைப் படிப்­ப­டி­யா­கத்­தான் அடை­ய­ வேண்­டும். என்­னால் முடிந்­த­வரை செய்த பிறகு அதை­யும் மீறி செய்ய முயல்­வேன். எல்லைகளைத் தொடர்ந்து தகர்த்­தெ­றி­யும்­போது முன்­னேற்­றம் தொடர்ச்­சி­யாக இருக்­கும்,” என்­றார் குகன்.