‘பாதையை மாற்றினாலும் தவறவிட்டதைப் பிடித்துவிடலாம்’

கிட்­டத்­தட்ட ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக செயின்ட் ஆண்ட்­ருஸ் உயர்­நி­லைப் பள்­ளி­யில் பயின்று சாதா­ரண நிலைத் தேர்­வில் சிறந்த மதிப்­பெண்­கள் பெற்ற ராஜேந்­தி­ரன் ராஜேஷ், விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் சேர்ந்­தார்.

ஆனால், மேல்­நி­லைத் தேர்­வில் இவர் சிறப்­பா­கச் செய்­யா­த­தால் தேசிய சேவை­யில் சேர்ந்­த­போது அடுத்து என்ன செய்­ய­வேண்­டும் என்ற குழப்­பம் இவ­ருக்கு ஏற்­பட்­டது.

அந்­தக் குழப்­பத்­திற்­கான பதிலும் தேசிய சேவை­யின்­போ­து­தான் இவ­ருக்கு கிடைத்­தது.

“உயிர் அறி­வி­யல் மீதான ஆர்­வம் அப்­போ­து­தான் எனக்கு ஏற்­பட்­டது. ஆசி­ரி­ய­ராக வேண்­டும் என்று தொடக்­கத்­தில் ஆசைப்­பட்­டேன். ஆனால் ராணு­வத்­தில் இருந்­த­போது தாதி­மைத் துறை மீது நாட்­டம் அதி­க­ரித்­த­தால், பிடித்த துறை­யி­லேயே வாழ்க்­கைத் தொழி­லைத் தொடங்க முடிவு செய்­தேன்,” என்று ராஜேந்­தி­ரன், 21, நினை­வு­கூர்ந்­தார்.

தற்­போது நன்­யாங் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தாதி­மைத் துறை­யில் முத­லாம் ஆண்டு பட்டயக் கல்வியை மேற்கொண்டு வருகிறார் ராஜேந்திரன். இத்­துறை மீது இவர் கொண்­டி­ருக்­கும் ஆர்­வம், இவர் பெற்­றி­ருக்­கும் மதிப்­பெண்­க­ளி­லும் பிர­தி­ப­லிக்­கிறது. இது­வரை இவர் பெற்­றி­ருக்­கும் ஜிபிஏ புள்­ளி­கள் 3.96.

தொடக்­கக் கல்­லூ­ரி­யில் மேல்­நி­லை­த் தேர்வு எழு­திய பிறகு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குச் செல்­வதற்குப் பதி­லாக பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்­தி­ருப்­பது ராஜேந்­தி­ர­னுக்கு தொடக்­கத்­தில் கவ­லை­யைத் தந்­தா­லும் அத­னால் இவர் துவண்­டு­வி­ட­வில்லை.

“தேசிய சேவையை முடிக்­கவே ஈராண்­டு­கள் ஆகி­வி­டு­கின்­றன. அதன் பிறகு கல்­விப் பாதையை மாற்­று­வ­தால் படிப்பை முடிப்­பது தாம­த­மா­கும் என்­பதை நான் அறிந்­தேன்.

“இந்த முடிவு எனக்கு சோர்­வை­யும் அழுத்­தத்­தை­யும் தந்­தது. ஆனால் விரும்­பாத ஒரு துறை­யில் சேர்ந்து முன்­னேற்­றப் பாதை­யில் செல்ல தடு­மா­று­வ­தை­விட பிடித்த துறை­யில் படித்து கல்­வியை முடிக்க தாம­தம் ஏற்­பட்­டா­லும் விட்­ட­தைப் பின்­னர் பிடித்­து­வி­ட­லாம் என்ற நம்­பிக்கை எனக்கு ஏற்­பட்­டது,” என்­றார் ராஜேந்­தி­ரன்.

பல சோத­னை­க­ளை­யும் தாண்டி தாம் எடுத்த முடி­வில் திட­மாக இருக்க, இவ­ருக்கு மன­உ­றுதி தேவைப்­பட்­டது. கார­ணம், பல­துறைத் தொழிற்­கல்­லூரி பாதை­யைத் தேர்ந்­தெ­டுக்க இவர் எடுத்த முடி­வைப் பல­ரும் குறை­கூ­றி­னர். ஆனால் அவர்­க­ளது வார்த்­தை­களை இவர் ஒரு பொருட்­டா­கக் கரு­த­வில்லை.

“இது என் வாழ்க்கை. இதைத் தீர்­மா­னிக்­கும் உரிமை எனக்­குத்­தான் உள்­ளது. அதே நேரத்­தில் நான் அவ­ச­ரப்­ப­ட­வில்லை. நன்கு ஆராய்ந்த பிறகே இந்த முடிவை எடுத்­தேன்,” என்று ராஜேந்­தி­ரன் கூறி­னார்.

ராணு­வத்­தில் மருத்­துவ உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றி­ய­போது இவ­ருக்கு மேல­தி­கா­ரி­யாக இருந்த மருத்­து­வர், தாதி­மைத் துறை­யில் இவ­ரால் சிறப்­பா­கச் செய்ய முடி­யும் என்று ஊக்­கம் அளித்­ததை ராஜேந்­தி­ரன் நினை­வு­கூர்ந்­தார்.

அந்த மருத்­து­வ­ரின் வார்த்­தை­கள் ராஜேந்­தி­ர­னுக்கு திருப்­பு­முனை­யாக அமைந்­தன.

“சிங்­ஹெல்த் குழு­மத்­தின் பொது வர­வேற்பு நிகழ்ச்­சிக்­குச் சென்று தாதி­மைத் துறை­யைப் பற்றி நான் மேலும் அறிந்­து­கொண்­டேன்,” என்று கூறி­னார்.

ஒரு துறை­யைத் தேர்ந்­தெ­டுக்­கும்­போது, வேலை செய்­யும் காலம் முழு­வ­தும் அந்­தத் துறை­யில் தம்­மால் செழித்­தோங்க முடி­யுமா என்று தீவி­ர­மாக யோசிக்க வேண்­டும் என்று இவர் அறி­வு­றுத்­து­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!