பொறுமை

பொறுமை

1 mins read
41de59d5-44cd-4a61-a96a-bed210cda072
-

அம்­மா­வின் தூண்­டு­த­லால் யோகா பயிற்­சியை 23 வயது விக்­நோப் சக்­தி­வேல், ஒரு விளை­யாட்­டாக மேற்­கொள்­ளத் தொடங்­கி­னார். ஆனால், அதுவே நாள­டை­வில் அன்­றாட நட­வ­டிக்­கை­யாக அவ­ருக்கு மாறி­விட்­டது.

ஐந்­தாண்­டு­க­ளாக விக்நோப் யோகா செய்து வரு­கி­றார்.

கடந்த 2017ல் வேதாத்ரி மக­ரி­ஷி­யின் எளி­ய­முறை குண்­ட­லினி யோகா­வைத் தன் தாயா­ரு­டன் கற்­கத் தொடங்­கி­னார் விக்­நோப்.

இவ்­வகை யோகா­வில் தியா­னம், காய­கல்­பம், அகத்­தாய்­வுப் பயிற்சி, எளிய உடற்­ப­யிற்­சி­கள் ஆகி­யவை கற்­றுத் தரப்­படும்.

யோகா செய்­யத் தொடங்­கி­யதுமு­தல், தன்­னி­டம் பொறுமை அதி­க­ரித்­த­தை­யும் மன அமை­தி­யும் தெளி­வும் பிறந்­த­தை­யும் கவ­னித்­தார் இளை­யர் விக்­நோப்.

மேலும், எளிய உடற்­ப­யிற்­சி­களைத் தொடர்ந்து செய்­வ­தால் தனது உட­லின் நெகிழ்­வுத்­தன்மை அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

யோகா­வில் பல­வகை உண்டு. அவ­ர­வர் தங்­க­ளது தேவைக்­கும் உடல் நிலைக்­கும் ஏற்ற பயிற்­சி­களைத் தேர்வு செய்­வது முக்­கி­யம். முறை­யான பயிற்­சி­யா­ள­ரி­டம் கற்­றுக்­கொள்­வ­தும் அவ­சி­ய­மா­கும்.