இணைய மிரட்டலுக்கு சவால் விடுக்கும் விவேக்

இணைய ஊடு­ரு­வி­கள் விளை­விக்­கும் பெரும் மிரட்­டலை எதிர்­கொள்ள அதி­ந­வீன மென்­பொருள் ஒன்றை விவேக் ராமச்­சந்­தி­ரன் உரு­வாக்கி, அதை ஒரு வர்த்­த­க­மா­கச் செயல்­ப­டுத்­தி­யும் வரு­கிறார். இணை­யப் பாது­காப்பு நிபு­ணர்­களை வளர்க்­கி­றார், அது­பற்­றிய கேலிச்­சித்­தி­ரங்­களை இளை­ய­ருக்­காக தயா­ரிக்­கி­றார்.

தமது துறை­யின் உச்­சா­ணிக் கொம்பை எட்­டிப் பிடித்­துள்­ள­போதி­லும் விவேக், 42, கனி­வாகப் பேசு­ப­வர், எளி­மை­யாக நடந்­து­கொள்­ப­வர். எங்­க­ளு­டன் தமி­ழில் உரை­யா­டும் வாய்ப்பு கிட்­டிய மகிழ்ச்சி அவ­ரி­டம் தென்­பட்­டது. ‘நான் தமி­ழைச் சரி­யா­கப் பேசு­கி­றேனா?’ என்று எங்­க­ளி­டம் அவர் கேட்­ட­போது அவ­ரது தன்­ன­டக்­கம் புலப்­பட்­டது.

சென்­னை­யில் பிறந்து பின்­னர் கோல்­கத்­தா­வுக்­குக் குடும்­ப­மாக குடி­பெ­யர்ந்­த­வர் விவேக்.

கணி­னித்­துறை மீதான ஆர்­வத்­தைத் தம்­மி­டத்­தில் விதைத்­தது தம் பெற்­றோர் என்­றார் விவேக். 1990களில் விவேக்­கின் பயன்­பாட்­டிற்­காக கணி­னியை வாங்க அவ­ரின் பெற்­றோர் எடுத்த முடி­வால் தம்­மு­டன் பொறி­யி­யல் படித்­த­வர்­க­ளைக் காட்­டி­லும் விவேக்­கின் கணி­னித் திறமை அதி­க­மாக இருந்­தது.

கல்­லூரி நாள்­க­ளின்­போது நண்­பர்­க­ளு­டன் போட்­டிபோட்டு ஊடு­ரு­வும் திறனை வளர்த்­துக்­கொண்­டார். ஊடு­ரு­வல் சம்­பவங்­க­ளைப் பற்­றிய செய்­தி­க­ளை­யும் வாசிப்­பார். நிர­லி­டு­த­லில் உள்ள அறி­வி­யல், கலைக்­கூ­று­களின் மீதான நாட்­டம் நாள­டை­வில் அவ­ரிடம் பெரு­கி­யது.

 

திரை­க­ட­லோ­டித் திறன்­தே­டு­தல்

 

2000களில் கூகல், யாஹூ போன்ற பெரும் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் ஊடு­ரு­வ­லுக்கு ஆளான சம்­ப­வங்­க­ளால் இத்­துறை மீதான இவ­ரது ஆர்­வம் மேலும் வளர்ந்­தது. இதன் தொடர்­பான வேலைப் பயிற்சி ஒன்றை 2003ல் சுவிட்­சர்­லாந்­தில் விவேக் மேற்­கொண்­டார். ஆனால் இணை­யப் பாது­காப்­புக்­கான வேலைச் சந்தை அப்­போ­தைய கால­கட்­டத்­தில் இந்­தி­யா­வில் இல்­லா­த­தால் அமெ­ரிக்­கா­வில் வேலை­பார்க்க முடிவு செய்­தார்.

இணை­யப் பாது­காப்­புத் துறை அடுத்த பத்து ஆண்­டு­களில் பெரிய துறை­யாக உரு­வெ­டுக்­கும் என்­ப­தைத் தம் பெற்­றோ­ருக்­குப் புரிய வைத்­தார் விவேக்.

அமெ­ரிக்­கா­வில் இணை­யப் பாது­காப்பு தொடர்­பான புது நிறு­வ­னங்­களில் பணி­யாற்­றிய விவேக், சில ஆண்­டு­க­ளி­லேயே வகுப்­பு­களை நடத்­தி­னார். வேலை செய்­வ­தி­லும் கற்­பிப்­ப­தி­லும் அதிக சுதந்­தி­ரம் விரும்பி தாமே ‘பென்­டெஸ்­டர்’ கல்வி நிலை­யத்தை ஆரம்­பித்­தார்.

“தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் ஓர் இந்­தி­யர் கற்­பிப்­பது பல­ருக்­கும் வியப்பை ஏற்­படுத்­தி­யது,” என்றார் அவர்.

2019ல் ‘பென்­டெஸ்­டர்’ கல்வி நிலை­யத்தை சிங்­கப்­பூ­ருக்கு இடம் மாற்­றி­னார் விவேக். இணை­யப் பாது­காப்­புத் துறை­யின் அடுத்­த­கட்ட தேவை­களைக் கருதி ‘ஸ்கு­வேர் எக்ஸ்’ நிறு­வ­னத்தை ஆரம்­பித்­தார்.

 

மாறு­பட்ட அணு­கு­முறை

 

‘ஸ்கு­வேர் எக்ஸ்’ மென்­பொ­ருள் வழி­யாக தீங்கு விளை­விக்­கும் மென்­பொ­ருள் கொண்ட மின்­கோப்பு திறக்­கப்­பட்­டால் கணி­னி­யைத் தாக்­க­வி­டாது கணி­னிக்கு வெளியே இயங்­கும் ‘கிள­வுட்’ தளத்­தில் கட்­டுப்­ப­டுத்­தப்­படும்.

இந்த அணு­கு­மு­றையை வேறு எந்த நிறு­வ­ன­மும் கையாண்­ட­தில்லை என்று இவர் கூறுகிறார். தனிப்­பட்ட பய­னீட்­டா­ளர்­களின் தேவைக்கு இணை­யப் பாது­காப்பு மென்­பொ­ருள்­கள் குறை­வாக இருப்­பது குறித்த நீண்டநாள் யோச­னைக்­குப் பிறகு இந்த மென்­பொ­ருளை உரு­வாக்­கும் யோசனை உத­ய­மா­ன­தாக அவர் கூறி­னார்.

“ஸ்கு­வேர் எக்ஸ் மென்­பொருள் முழுக்க முழுக்க ஒரு சிங்­கப்­பூர் படைப்பு. நானும் என் குழு­வி­ன­ரும் சிங்­கப்­பூ­ரில் இருந்த­ப­டியே இந்­தப் பணித்­திட்­டத்­திற்­கான முன் ஆய்­வு­க­ளைச் செய்து உரு­வாக்­கி­னோம்,“ என்று அவர் பெரு­மி­தத்­து­டன் கூறி­னார்.

 

வரை­கலை ஆர்­வம்

 

தம் துறை­யைப் பற்­றிய புரி­தல் பொது­மக்­க­ளுக்­குத் தேவைப்­படு­வ­தா­கக் கூறிய திரு விவேக், இது தம் சொந்­தப் பிள்­ளை­க­ளுக்­கும் பொருந்­தும் என்­றார்.

தாம் ஓர் ஊடு­ருவி எனத் தம் மகன் தவ­றாக எண்­ணி­யதை நகைத்­த­படி நினை­வு­கூர்ந்த விவேக், தமது தொழில் எத்­த­கை­யது என்­பதை எடுத்­து­ரைக்க இறு­தி­யில் கேலிச்­சித்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­வு­செய்­தார்.

‘ஊடு­ரு­வி­கள் - மின்­னி­லக்க யுகத்­திற்­கான அதி­நா­ய­கர்­கள்’ (Hackers - Superheroes of the Digital Age) என்ற தலைப்­பி­லான திரு விவேக்­கின் கேலிச்­சித்­தி­ரப் புத்­த­கம், ராமா என்ற நிரல் நிபு­ணர் இணை­யக் குற்­றங்­க­ளைத் தடுப்­ப­தா­கச் சித்­தி­ரிக்­கிறது.

தீர்வு காணும் திறன் குறித்து, “உங்­க­ளைச் சுற்­றி­யுள்ள நடப்­பு­களை­யும் பிரச்­சி­னை­க­ளை­யும் கவ­னி­யுங்­கள். நீங்­கள் தேர்ந்­தெடுத்த துறை­யின்­வழி அந்­தப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண முடி­யுமா என எண்­ணிப் பாருங்­கள். சிறிய பிரச்­சி­னை­க­ளைக் களை­யக் களை­யப் பெரும் தீர்­வுகளுக்கான திறனை வளர்த்துக்­கொள்ள முடி­யும்,” என்­றார் விவேக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!