மின்ஸ்கூட்டர் விபத்து; 62 வயது ஆடவர் பலி

கோல்யர் கீ நோக்கிச் செல்லும் சிசில் ஸ்திரீட்டில் டிரக் வாகனம் ஒன்றுடன் ஒரு மின்ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த மின்ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற 62 வயது ஆடவர் மரணம் அடைந்தார். இந்த விபத்து நேற்றுக் காலை நிகழ்ந்தது. மின்ஸ்கூட்டரில் சென்ற ஆடவர் அதே இடத்தில் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் அறிவித்தனர். அலட்சியமாக வாகனத்தை ஓட்டி அதன்மூலம் ஒருவருக்கு மரணத்தை விளைவித்ததற்காக 62 வயதாகும் டிரக் வாகன ஓட்டி ஒருவர் கைதாகியிருக்கிறார் என்று போலிஸ் தெரிவித்தது.

புலன் விசாரணை தொடர்வதாகவும் அது குறிப்பிட்டது. இதற்கிடையே, அந்த விபத்துக் குப் பிறகு விபத்து நிகழ்ந்த இடத் தைக் காட்டும் காணொளி ஃபேஸ் புக்கில் சாலை பாதுகாப்புப் பக்கம் ஒன்றில் பதிவேற்றப்பட்டது. சிங்கப்பூரில் மின்சார இரு சக்கர வண்டிகளில் சென்று ஒரு வாகனத் தில் மோதி விபத்துக்கு உள்ளாகி சென்ற மாதம் இரண்டு பேர் மரணம் அடைந்தார்கள். இந்த விபத்து வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையில் பாண்டான் கிர செண்ட் சந்திப்புக்கு அருகே நிகழ்ந் தது.

கோல்யர் கீ நோக்கிச் செல்லும் சிசில் ஸ்திரீட்டில் நிகழ்ந்த விபத்தில் 62 வயது மின்ஸ்கூட்டர் ஓட்டி மாண்டார். தி நியூ பேப்பர் வாசகர்