கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தேனி: விருதுநகரில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியில் கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் பாலகுரு தலைமையில் அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகளில் நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை நடத்தி வந்தனர். இதன் பயனாக நேற்று காலை சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் கிட்டத்தட்ட 4 டன் அளவிற்கு ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பின்னர் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்பில் விருதுநகரைச் சேர்ந்த கருப்பையா (வயது38), தேனியைச் சேர்ந்த ராஜேவேல், கம்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த அரிசி மூட்டைகள் கேரளாவிற்கு கடத்திக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த அரிசியை எந்த ரேஷன் கடைகளில் இருந்து இவர்கள் வாங்கி வந்தனர் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் போலிசார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!