தமிழ்நாட்டில் கட்டுமானத் துறைக்கு பெரும் பாதிப்பு

இந்திய ரூபாய் 500, 1,000 நோட்டு கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட 11 நாட்கள் ஆன நிலையில் தமிழகத்தில் உள்ள கட்டுமானத் துறை ஊழியர்கள் வேலை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கி யுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் கட்டு மானத்துறை முற்றிலும் முடங்கி விட்டதாகவும் அத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பணத் தட்டுப்பாட்டுப் பிரச் சினை விரைவில் தீர்க்கப்பட வில்லை என்றால் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்கள் பல கட்டுமானத் திட்டங்கள் பேரிடர் சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்றும் நிபு ணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

உணவு இன்றி, சம்பளம் இன்றி கட்டுமானத்துறை ஊழியர் கள் வாழ்வுக்குப் போராடுவதாக இந்திய சொத்து மேம்பாட்டுச் சங்கங்களின் சம்மேளத்தின் என்.நந்தகுமார் தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கு பங்கீட்டு முறையில் உணவு வழங்க ஏற் பாடு செய்யுமாறு சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். "சராசரியாக ஒரு கட்டுமானத் திட்டத்தில் 100 முதல் 200 பேர் வரையில் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் அந்த சம்மேளத் தின் சென்னையைச் சேர்ந்த 130 உறுப்பினர்கள் உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!