யீ‌ஷுன் சமூக மருத்துவமனை அதிகாரபூர்வமாகத் திறப்பு

எதிர்காலத்தில் நோயாளிகளின் பரா மரிப்பில் சமூக மருத்துவமனைகள் பெரும்பங்காற்றும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரி வித்துள்ளார். சுகாதாரப் பராமரிப்பு 2020 பெருந் திட்டத்தின்கீழ் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்றத்தின் ஒரு பகுதியே இது என்று திரு கான் கூறினார். யீ‌ஷூன் சமூக மருத்துவமனையை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்துப் பேசியபோது அமைச்சர் கான் இவ்வாறு சொன்னார்.

“வருங்காலத்தில் மூப்பியல், நினைவாற்றல் இழப்பு, வலி குறைப்பு நோயாளிகளுக்கு அதிக அளவில் குறுகிய கால உள்நோயாளிப் பரா மரிப்பு சேவை வழங்கும் வகையில் சமூக மருத்துவமனைகள் தங்களது பங்களிப்பை விரிவுபடுத்தும்,” என்று அவர் தெரிவித்தார். ஒரு சமூக மருத்துவமனையை நடத்துவதற்கான செலவு குறைவு என்றும் அங்கு தாதியருக்கும் நோயாளி களுக்குமான விகிதம் 1:16 என்றும் கூறப்பட்டது.

யீ‌ஷுன் சமூக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருடன் உரையாடும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

19 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்