மகளைப் பார்த்து பூரிக்கும் பெற்றோர்

இயக்குநர் ஏ.எல்.விஜய்யைப் பிரிந்துவிட்ட அமலா பால் முழு மூச்சாக படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அதற்காக பல இயக்குநர்களைப் பார்த்தும் வருகிறார். இந்த வரிசையில் புதுமுக இயக்குநர்களையும் விடவில்லை அவர். இதற்கிடையே அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களையும் வெளியிட்டு பரபரப்புக் கூட்டி வரும் அமலா பால் அடுத்தபடியாக நயன்தாரா, திரிஷா போன்று கதையின் நாயகியாக நடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அதன் காரணமாக, அண்மையில் தன்னைச் சந்தித்துக் கதை சொல்ல வந்த இயக்குநர்களிடம் தனக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்குமாறு கதை எழுதி வருமாறு கூறி திருப்பி அனுப்பி வருகிறார்.

அதோடு அப்படித் தன்னிடம் கதை சொல்ல வந்தவர்கள் புதுமுக இயக்குநர்களாக இருந்தால் அந்தக் கதையை 5 நிமிடம் காணொளிக் காட்சியாக தயார் செய்து வருமாறு கூறுகிறார் அமலா பால். அப்படிக் கொண்டு வரும் காணொளியைப் பார்த்து அதில் தனக்குத் திருப்தி ஏற்பட்டால் 'கால்‌ஷீட்' கட்டாயம் தருவதாகக் கூறியுள்ளாராம் அமலா பால். இவருடைய கட்டளைகளைக் கேட்டு புது இயக்குநர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். தற்பொழுது 'திருட்டுப்பயலே=2', 'வேலையில்லா பட்டதாரி-2', 'வட சென்னை' மூன்று முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

இதில் சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி-2'ஆம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்க இருக்கிறார். அதோடு கன்னடத்தில் சுதீப்புக்கு ஜோடியாக 'ஹெப்புலி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது அமலா பாலின் முதல் கன்னடப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 4 படங்கள் தவிர தெலுங்கில் இரு படங்கள், மலையாளத்தில் ஒரு படம் என ஒரே நேரத்தில் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார் அமலா பால்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!