பாய லேபார் ஆலமரத்துக்கு அழிவே இல்லை

கேலாங் செராயில் ஒரு காலத்தில் இளையர்களின் அடையாளச் சின் னமாகத் திகழ்ந்த ஒரு முதுபெரும் ஆலமரம் இனி இராது என்றாலும் அதனுடைய விழுதுகள் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களிலும் வேர்விட இருக்கின்றன. கேலாங் செராய் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலை வரான எரிக் வோங், 60, சிறு பிள்ளையிலிருந்து கேலாங் செராய் பகுதியிலேயே வளர்ந்தவர். அவ ருக்கும் அவருடைய சிறு வயது கூட்டாளிகளுக்கும் அந்த மரத் தைப் பற்றி நன்கு தெரியும். அவர்கள் ஒரு திடலில் காற் பந்து விளையாடுவார்கள். அப்போ தெல்லாம் அந்த மரத்தைச் சுற்றி தான் அவர்கள் சந்திப்பது வழக்கம்.

பல ஆண்டு காலத்தைப் பார்த்துப்பார்த்து 15 மீட்டர் உயரத் திற்கு அந்த ஆலமரம் வளர்ந்தது. அதன் வேர்களும் விழுதுகளும் 20 மீட்டர் பரப்புக்கு விரிவடைந்தன. என்றாலும் தொடர்ந்து மாறி வரும் உலகில் மாற்றம் ஒன்றே நிலையானது என்பதை மெய்ப் பிக்கும் வகையில், அந்த பிரம் மாண்ட ஆலமரம் சென்ற ஆண்டு பாய லேபார் எம்ஆர்டி நிலையத் திற்கு அருகே ஒரு புதிய கட்டடத் திற்கு வழிவிடும் வகையில் தன் கதையை முடித்துக்கொண்டது. அந்தப் புதிய கட்டடத்தைக் கட்டும் லேண்ட்லீஸ் என்ற நிறு வனம் அந்த இடத்தில் 'பாய லேபார் குவார்ட்டர்' என்ற வர்த்தக, சில்லறை வர்த்தகக் குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டவிருக்கிறது.

இந்த ஆலமரத்திலிருந்து எடுக்கப்படும் விழுதுகள் பேணி வளர்க்கப் பட்டு பல இடங்களிலும் நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக் கிறது. லேண்ட்லீஸ் நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவரான திரு வில்டு என்பவரும் அவருடைய புதல்வர்களும் இந்த மரத்தின் விழுதுகளைப் பராமரிக்கும் பணியில் உதவி வருகிறார்கள். படம்: லேண்ட்லீஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!