தந்தை காட்டிய வழியில் மகன்

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூரில் உணவுப் பிரியர் களுக்கு எப்போதும் பெயர்போனது ஆடம் ரோடு உணவங்காடி நிலையம். அங்கு அமைந்துள்ள 32 சீன, மலாய், இந்திய உணவுக் கடைகளிலும் உள்ளூர்வாசி களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் மிகவும் பிடித்தமான நாவூறும் அறுசுவை உணவுகள் கட்டுப் படியான விலையில் விற்கப் படுகின்றன. அவ்வகையில், அங்குள்ள புகழ்பெற்ற ஆட்டிறைச்சி சூப் கடை, தீவு முழுவதுமிருந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. அங்கு சுடச்சுட சமைத்து வழங்கப் படும் நெஞ்சு எலும்பு, ஆட்டுக் கால் சூப் போன்ற பல வகை சூப் வகைகள் தங்களது நாவின் சுவை அரும்புகளை அசத்துவ தாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். அந்தப் புகழ் 'பரக்கத்' ஆட்டி றைச்சி சூப் கடை உரிமையாளர் திரு சையது அப்துல் ரஹ் மானையே சென்றடையும். தந்தை செதுக்கிய பாதையைத் தொடரும் இவர், தினந்தோறும் கடமை உணர்வுடன் ஆட்டிறைச்சி சூப் தயாரித்து பரிமாறுகிறார்.

ஆடம் ரோடு உணவங்காடி நிலையம் 1973ல் தொடங்கப்பட்டது முதல் 'பரக்கத்' ஆட்டிறைச்சி சூப் கடை அங்கு இயங்குகிறது. "இளம் வயது முதல் தந்தைக்குக் கடையில் நான் உதவி வந்தேன். "எனக்குப் பள்ளிக்குச் செல்ல பிடிக்காததால் உயர்நிலை ஒன்றில் கல்வியை நிறுத்திவிட்டுத் தந்தை யுடன் சேர்ந்து முழுநேரமாகக் கடையை நடத்த முடிவெடுத் தேன்," என்றார் திரு ரஹ்மான், 53.

ஆடம் ரோடு உணவங்காடி நிலையத்தில் உள்ள 'பரக்கத் ஆட்டிறைச்சி சூப்' கடை நடத்தும் திரு சையது அப்துல் ரஹ்மான் (இடது). அவருக்கு உதவும் மனைவி அலிமா பீவி, மகன் முஹம்மது ஹக்கிம். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!