வாட்ஸ்அப் சேவையை இழந்த பல மில்லியன் திறன்பேசிகள்

புத்தாண்டு நாளிலிருந்து பழைய திறன்பேசிகளில் தனது சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது பிரபல குறுஞ்செய்திச் செயலியான வாட்ஸ்அப். பாதிக்கப்பட்ட வாடிக்கையா ளர்கள் புதிய, மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய திறன்பேசி களை வாங்கினால் மட்டுமே இனி வாட்ஸ்அப் சேவையைப் பெற இயலும்.

உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் மேற்பட்டோர் அந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின் றனர். இந்த நிலையில், 2016 முடிவுடன் பழைய இயங்குதளங் களைக் கொண்ட திறன்பேசி களில் தனது சேவையை நிறுத்திக் கொள்ள இருப்பதாக ஏற்கெனவே வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து இருந்தது.

இதையடுத்து, ஐஃபோன் 3ஜிஎஸ், விண்டோஸ் ஃபோன் 7, ஆண்ட்ராய்ட் 2.1 அல்லது ஆண்ட்ராய்ட் 2.2 போன்ற திறன் பேசிகளை வைத்திருக்கும் மில்லி யன்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இனி இந்த திறன்பேசிகளில் வாட்ஸ்அப் இயங்காது 2017ஆம் ஆண்டிலிருந்து:

► ஆண்ட்ராய்ட் 2.1, 2.2

► விண்டோஸ் ஃபோன் 7

► ஐஃபோன் 3ஜிஎஸ் ஐஓஎஸ் 6

2017 ஜூன் மாதம் முதல்:

► பிளாக்பெரி

► நோக்கியா S40

► நோக்கியா சிம்பியன் S60

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!