ஜல்லிக்கட்டு போராட்டக் களம்: தடியடி, கைது, இயக்குநர் காயம்

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளை யாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி உச்ச நீதிமன்றத் தடையை மீறி பல்வேறு இடங்களில் நடத்தப் பட்டது. இதனால் கைது, போலிஸ் தடியடி என்று பொங்கல் திருநாள் போராட்ட நாளாக மாறியது. உச்ச நீதிமன்றம் கடந்த 2014 மே மாதம் ஜல்லிக்கட்டுப் போட் டிக்குத் தடை விதித்ததன் காரண மாக 2015, 2016 ஆண்டுகளின் பொங்கல் திருநாளில் அந்தப் போட்டி நடைபெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண னனும் மாநில அமைச்சர்களும் அவ்வப்போது கூறி வந்தனர்.

வழக்கமாக, பொங்கல் திரு நாளன்று அவனியாபுரத்திலும் அதற்கு மறுநாள் பாலமேட்டிலும் மூன்றாம் நாள் அலங்காநல் லூரிலும் என மதுரை மாவட் டத்தில் வரிசையாக மூன்று நாட் கள் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் புகழ்பெற்றவை. அந்த வரிசைப்படி நேற்று அவனியாபுரத்தில் தடையை மீறி தற்காலிக வாடிவாசல் அமைத்து பத்து காளைகளை வைத்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப் பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதர வான போராட்டமும் அங்கு நடைபெற்றது. இதனால் அவனி யாபுரத்தில் காலை முதலே பதற்றம் பரவியது.

போராட்டத்தில் பங்கேற்றவர் கள் ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கோரியும் பீட்டா எனப்படும் விலங்குநல அமைப்பைத் தடை செய்யக் கோரியும் முழக்கம் எழுப் பினர். திரைப்பட இயக்குநர்கள் அமீர், கௌதமன், நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வந்து போராட்டத் தில் கலந்துகொண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!