சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள், பிரபலங்கள் சந்திப்பு

சென்னை: அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி மற்றும் அவருடைய கணவர் விஜயகுமார் ரெட்டி ஆகியோர் அதிமுக பொதுச் செய- லாளர் சசிகலாவை நேரில் சந்- தித்து, தங்களது மகன் திருமணம் 8ஆம் தேதி நடைபெற உள்ளதை முன் னிட்டு அதற்கான அழைப்- பிதழை வழங்கி, திருமணத்திற்கு வருகைதரும்படி அழைப்பு விடுத்த- னர். அமெரிக்கத் தமிழ் இளைஞர்- கள் உலகக் கூட்டமைப்பின் தலை- வர் டாக்டர் விஜய் பிரபாகர், செய- லாளர் பிரவீன்குமார் பிரித்திவி, கூட்டமைப்பின் இந்தியத் தலைவர் டாக்டர் மயில்வாகனன், அமெரிக்க இயக்குநர்கள் சசிகுமார், டாக்டர் தீரஜ்கிருஷ்ணா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், அவரது மனைவி, கவிஞர் கண்ணதாசன் மகள் விசாலி கண்ணதாசன் ஆகி யோர் தனித்தனியே நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். 'அம்மா ஸ்போர்ட்ஸ் பவுண்டே - ஷன்' அமைப்பின் தலைவர் வீரா, பொருளாளர் சரிதா ஆகியோர் சசிகலாவை நேரில் சந்தித்து ஜெயலலிதா பிறந்தநாளை முன்- னிட்டு 19.2.2017 முதல் மாவட்டத் தலைநகரங்களில் நெட்டோட்டப் போட்டி நடைபெற உள்ளதற்கான அழைப்பிதழை வழங்கினர். கேர ளாவைச் சேர்ந்த ஓவியர் இல்லி யாஸ் என்பவர் சசிகலாவை நேரில் சந்தித்து தான் வரைந்த அவரின் படத்தை வழங்கி ஆசி பெற்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நாள்தோறும் பிரபலங்களும் அதிமுக நிர்வாகிகளும் சந்தித்த வண்ணம் உள்ளனர். அவ்வகையில், நேற்று முன்தினம் அப்பல்லோ குழுமத்தின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, அவருடைய கணவர் விஜயகுமார் ரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் சசிகலாவைச் சந்தித்தனர். படம்: அதிமுக தலைமைக் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!