ஈரான் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க அமெரிக்கா திட்டம்

வா‌ஷிங்டன்: ஈரான் அண்மையில் ஏவுகணைச் சோதனைகளை நடத் தியதால் அந்நாட்டின் பல நிறு வனங்களுக்கு வெள்ளிக் கிழமைக்குள் தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் அந்தத் தடைகள் 2015ஆம் ஆண்டில் ஈரானுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந் தத்தை மீறுவதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் செயல்படும் சுமார் எட்டு ஈரானிய நிறுவனங் களுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் நிறுவனங்களின் பெயர்களை அது வெளியிடவில்லை.

இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் தடையால் ஈரான், ஈராக்குக்கு போயிங் விமானங்களை விற்கும் 20 பில்லியன் டாலர் திட்டத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறப் படுகிறது. இதற்கிடையே வடகொரியா வையும் அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. அணுவாயுதங்களைப் பயன் படுத்தினால் பதிலடி மித மிஞ்சிய அளவில் இருக்கும் என்றார் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ். தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டு தலைநகர் சோலுக்கு வந்துள்ள அவர், தென் கொரியாவுக்கு அமெரிக்க ஆதரவை உறுதிப்படுத்தினார்

தென்கொரியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஜப்பான் வந்த அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிசை பிரதமர் ‌ஷின்சோ அபே வரவேற்கிறார். இந்தச் சந்திப்பில் ஜப்பானுக்கு அமெரிக்கா 100 விழுக்காடு தோள் கொடுக்கும் என்று திரு மேட்டிஸ் உறுதி கூறினார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!