மாணவர்கள் மோதல்: நூறு திருக்குறள்களை ஒப்புவிக்க நீதிபதி ஆணை

கோவை: மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் நூறு திருக் குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாணவர்களை நல்வழிப் படுத்தும் விதமாக மேட்டுப்பாளை யம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவு பொதுமக்களைக் கவர்ந்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சில தினங்களுக்கு முன்னர் மோதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மாணவர்களைக் கைது செய்தனர்.

மூவரும் நேற்று மேட்டுப்பாளை யம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது மாணவர்கள் சார்பில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணையின் போது மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் நீதிபதி. பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஒவ் வொரு மாணவரும் தனித்தனியாக நூறு திருக்குறள்களை, மேட்டுப் பாளையம் அரசு ஆண்கள் பள்ளி யின் தமிழாசிரியரிடம் ஒப்புவிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார். மாணவர்களுக்கு விதிக்கப் பட்ட இந்த நிபந்தனை பிணை குறித்து மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் பரவலாக விவாதித்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon