ப.சிதம்பரம்: ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை

சென்னை: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை பெருத்த ஏமாற்றம் அளித்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், விவசாயத்துக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் மறைமுக வரியைக் குறைக்காதது தவறு என்றும் குறை கூறினார். "செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் ரொக்கப் பரிவர்த்தனையை நம்பியுள்ள 15 கோடி மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரையும் சேர்த்தால் 40 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"அந்த அறிவிப்பால், வேளாண் பொருட்கள் விலை வீழ்ந்தது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட் டது. 80 விழுக்காடு சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் செயலிழந் தன," என்று குற்றம்சாட்டினார் ப.சிதம்பரம். பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் வருமானம் எந்தவிதத்தி லும் உயரவில்லை என்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மேலும் 2 ஆண்டுகள் நீடிக்கும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!