சிந்துவுக்கு இந்திய ஓப்பன் பட்டம்

புதுடெல்லி: பேட்மிண்டன் விளையாட்டில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையும் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் தன்னை வீழ்த்தி தங்கம் வென்றவருமான கரோலினா மரினை 21-19, 21-16 என்ற செட்களில் வீழ்த்தி இந்திய ஓப்பன் பட்டத்தை முதன்முறையாக வென்றார் ஐந்தாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து. வெற்றியை 46 நிமிடங்களில் தன்வசமாக்கினார் 21 வயது நிரம்பிய சிந்து. மரினுக்கு எதிராக அவர் பெற்ற நான்காவது வெற்றி இது; ஐந்து முறை தோற்று இருக்கிறார். கிண்ணம் வென்ற மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த சிந்து, "எனது ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து நான் மிகவும் மகிழ்கிறேன். இவ்வெற்றி எனது நம்பிக்கையை அதிகரித்து, ஆகஸ்ட்டில் நடக்கவுள்ள உலக வெற்றியாளர் போட்டிகளுக்கு இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும் என்று ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!