சிறுகதை, கவிதைப் பயிலரங்கு

கோல்டன் பாயிண்ட் விருதுப் போட்டியை முன்னிட்டு தமிழில் சிறுகதை, கவிதைப் பயலரங்கு கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 35க்கும் அதிகமான நூல் களை எழுதியுள்ள பிரபல படைப் பாளர் ஜெயந்தி சங்கர் சிறுகதைப் பயிலரங்கை நடத்துகிறார். யாருக்காக, ஏன் எழுதுகி றோம், சிறுகதை எழுதுவதன் பொது நோக்கங்கள் எவை, சமகாலத்தில் எழுதப்படும் சிறு கதைகளின் போக்குகளைக் கவனித்தல் ஆக்கங்களை எவ் வாறு மேம்படுத்தும், சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றை எழுதுகையில் கவனிக்க வேண்டி யவை யாவை, போன்ற கேள்வி களின் அடிப்படையில் பயிலரங்கு நடைபெறும். சிறுகதை, கவிதை, சிறுவர் நூல்களை எழுதியுள்ள படைப் பாளர் சித்துராஜ் பொன்ராஜ் ஆங்கிலம், தமிழ் இரு மொழி களிலும் நடத்தும் கவிதைப் பயிலரங்கில் தமிழ் பின் நவீனக் கவிதைகளின் தோற்றம், வளர்ச்சி, பின்நவீனக் கவிதை களைப் புரிந்துகொள்ளுதல், எழு துதல் பற்றி அறிந்துகொள்ளலாம்.

ஆர்ட்ஸ் ஹவுசில் நாளை சனிக்கிழமை கவிதைப் பயில ரங்கு காலை 10 -= பகல் 1 மணி வரையும் சிறுகதைப் பயிலரங்கு பிற்பகல் 2 -= மாலை 5 மணி வரையும் நடைபெறும். கட்டணம் உண்டு. கோல்டன் பாயிண்ட் விருது தேசிய அளவில் நான்கு மொழிகளிலும் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 'கோல்டன் பாயிண்ட்' விருதுப் போட்டி தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் நான்கு மொழிகளிலும் சிறுகதை, கவிதை என இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதுவரை நூல்கள் வெளியிடாத சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசி களும் போட்டியில் பங்கேற்கலாம். கவிதை, சிறுகதை இரு பிரிவிலும் ஒருவர் கலந்து கொள் ளலாம். நான்கு மொழிகளுக்கும் கவிதை, சிறுகதை இரு பிரிவிலும் தனித்தனியாகப் பரிசு வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு https:// www.theartshouse.sg/whatson/ golden-point-award-2017 எனும் இணையத் தளத்தைப் பார்க்கவும். படைப்புகள் ஆர்ட்ஸ் ஹவுசிற்கு கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 14.07.2017.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!