விரக்தியால் கவர்ச்சியாக நடிக்க தமன்னா இணக்கம்

‘இருமுகன்’ வெற்றிக்குப் பின்னர் சீயான் விக்ரம் தற்பொழுது நடித்து வரும் படத்தின் பெயர் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் முதன் முதலாக தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார் நடிகர் விக்ரம். அண்மையில் வெளியாகி உலக அளவில் வெற்றி பெற்றிருக்கும் ‘பாகுபலி 2’ படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் தமன்னா மட்டும் மனதுக்குள் குமுறிக் கொண்டு இருக்கிறாராம். ‘பாகுபலி’ படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பினால் பலர் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தனர் என்ற பெருமிதத்தில் இருந்தார்.

அதேபோல் ‘பாகுபலி 2’ படத்திலும் தனக்கு நிறையக் காட்சிகள் இருக்கும். தன்னுடைய திறமையை வெளிக் கொணரலாம் என்று இருந்த தமன்னாவிற்கு ஏற்பட்டது ஏமாற்றமே. ‘பாகுபலி 2’ படத்தில், இறுதிக் காட்சியில், ஒரு துணை நடிகையைப்போல் தன்னைக் காட்டியதை இன்னும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார். அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் ‘ஸ்கெட்ச்’ படத்தில் பாடல் காட்சியில் அதிகமாக கவர்ச்சி காட்டுவதுடன் தன்னுடைய திறமையைக் காட்டி நடிப்பிலும் அசத்த இருக்கிறாராம் தமன்னா. அவருடைய ஏமாற்றம் ‘ஸ்கெட்ச்’ படக் குழுவினருக்கு அடித்தது யோகம். இந்தப் படத்தில் ‘பைக்’ திருடனாக நடிக்கிறாராம் விக்ரம்.