லண்டன்: தாக்குதல்காரர் விவரங்கள் சாத்தியமாகும்போது அறிவிக்கப்படும்

பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் சனிக்கிழமை இரவு பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய மூவரின் விவரங்கள் தங்களுக்குத் தெரியும் என்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் பிரிட்டிஷ் போலிஸ் தெரிவித் துள்ளது. அவர்கள் பெயர்களை "சாத்திய மாகும்போது" தெரிவிப் போம் என்று அவர்கள் கூறினர். ஏழு பேர் உயிரிழப்புக்குக் காரணமான அந்தத் தாக்கு தலுக்கு ஐஸ்ஐஸ் அமைப்பு பொறுப் பேற்றுள்ளது. லண்டன் பாலத்தில் பயங்கர வாதிகள் வாகனம் கொண்டு பாதசாரி களை மோதி தாக்கியது டன் கத்தியால் குத்தியும் நடத் திய தாக்குதலில் 48 பேர் காயம் அடைந்துள்ள னர். அதில் 21 பேர் கடுமையான காயங்களுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதற்கு முன் இல்லாத அளவுக்கு பிரிட்டிஷ் போலிசார் 50 தோட்டாக்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவ ர்கள் தற்கொலை வெடி குண்டுகளை அணிந்திருந்ததாக நம்பப்பட்டதால் போலிசார் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது. அவை போலி வெடிகுண்டுகள் என்பது பின்னர் தெரியவந்தது. கிழக்கு லண்டனின் நியூஹம், பார்கிங் பகுதிகளில் நேற்றுக் காலையில் போலிசார் அதிரடி சோதனை நடத்தியபோது மேலும் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்க முடிந்தது. தாக்குதல் நடத்தியவர் ஒரு வரின் வீடு என நம்பப்படும் பார்கிங் பகுதியிலுள்ள அடுக்கு மாடி வீடு ஒன்றில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோத னை யைத் தொடர்ந்து அப்பகுதி யில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் தாக்கப்பட்டவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் போலிஸ் படை சார்பாக மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தும் போலிசார். கடந்த இரு நாட்களாக போலிசார் மேற்கொண்டு வரும் சோதனைகளில் பலரைக் கைது செய்துள்ளனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!