கட்டுமானத் தளங்களில் பணியிட மரணங்கள் குறைந்தன

கட்டுமானத் தளங்களில் பணியிட மரணங்கள் குறைந்துள்ளன. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் கட்டுமானத் தளங் களைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு பணியிட மரணம் நிகழ்ந்தது. கடந்த ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் கட்டுமானத் தளங் களில் சராசரியாக ஆறு பணியிட மரணங்கள் நிகழ்ந்தன. கடந்த ஆண்டில் கட்டுமானத் தளங்களில் 24 பணியிட மரணங்கள் நிகழ்ந்தன. அவற்றில் 17 முதல் ஆறு மாதங்களில் நிகழ்ந்தன. பணியிடப் பாதுகாப்பு தொடர் பாகக் கட்டுமானத் துறை நிறுவனங்கள் ஒன்றிணைந்து எடுத்த முயற்சிகளால் பணியிட மரணங்கள் குறைந்திருப்பதாக மனிதவள துணை அமைச்சர் சேம் டான் தெரிவித்தார். “நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் நாம் விழிப்புடன் இருப்பது ஒவ்வொ ருவரின் கடமையாகும். வேலைச் சூழலை மதிப்பீடு செய்து அதில் இருக்கும் ஆபத்துகளை எதிர் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஷங்காய் நகரிலுள்ள ஷாங்ஜியாங் அனைத்துலக புத்தாக்கத் துறை முகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மனித இயந்திரத்தை இயக்கியப் பார்க்கிறார். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

26 May 2019

ஹெங்: சவால்களைச் சமாளிக்க தொழில்நுட்பம்