தாக்குதல்காரர்கள் பெயர்களை லண்டன் வெளியிட்டது

லண்டன்: லண்டனில் ஏழு பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான வர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட மூவரின் பெயர்களையும் அவர் களைப் பற்றிய விவரங்களையும் பிரிட்டிஷ் போலிசார் வெளியிட் டுள்ளனர். அவர்களின் ஒருவன் 27 வயது குராம் ஷாஸத் பட், மற்றொருவன் ரசிட் ரெடவுன், மூன்றாவது நபர் மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இத்தாலி யரான 22 வயது யூசஃப் ஸக்ஃபா என்று போலிசார் அறிவித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மூவரை யும் போலிசார் சுட்டுக் கொன்றனர். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதக் குழு பொறுப் பேற்றுக்கொண்டுள்ளது.

லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவன் என்று சந்தேகிக் கப்பட்ட குராம் பட், பாகிஸ்தானில் பிறந்த, பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவன் என்று போலிசார் கூறினர். பிரிட்டனில் வசிக்கும் தீவிர வாதிகளைப் பற்றி சென்ற ஆண்டு தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்ட விளக்கப்படத்தில் குராம் பட் காணப்பட்டதாகவும் இவனை பிரிட்டிஷ் போலிசார் அப்போது விசாரணை செய்ததாகவும் ராய்ட் டர்ஸ் தகவல் தெரிவித்தது. குராம் பட், தடை செய்யப்பட்ட அல்-முஹாஜிரூன் எனும் இஸ்லாமியக் குழுவைச் சேர்ந்த வன் என்று கார்டியன் தகவல் தெரிவித்தது. பிரிட்டனில் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் கிழக்கு லண்டன் மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று இக்குழு சென்ற மாதம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.