ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மோசடி: நால்வர் மீது குற்றச்சாட்டு

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித் திட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக நான்கு தனிப்பட்டவர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. Biz HR Solutionz என்னும் நிறுவனத்தின் இயக்குநர் எரிக் ஜெங் ஜென்வெய், பயிற்சி பெறுவதற்காக அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படும் டான் யு ஷெங், சிம் சீ, கியோங், பயிற்சியாளர் ஜோயல் இயோ ஜுன்வெய் ஆகியோரே குற்றம் சாட்டப்பட்ட நால்வர். பயிற்சி அளிக்கும் நிறு வனம் போல நடந்துகொண்டு உதவித் தொகையை அந்நிறு வனத்திடம் வழங்குவதற்காக முன்பிருந்த ஊழியரணி மேம் பாட்டு முகவையை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்காக மூவரும் பொய்யான வருகைப் பதிவேட்டைத் தயார் செய்ததற் காக பயிற்சியாளர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. எந்த வொரு தனிப்பட்டவரோ பயிற்சி நிறுவனமோ அமைப்போ தனது நிதி உதவித் திட்டத்தில் மோசடி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு எச்சரித்துள்ளது.