பாலர் கல்வித் துறை மாணவர்கள் தெமாசெக் பலதுறை தொழில் நுட்பக் கல்லூரியில் உள்ள சோதனை பாலர் பள்ளியில் நேரடி அனுபவம் பெறலாம். பாலர் கல்வி துறையில் பயில்வோர் பாலர் மேம்பாடு தொடர்பாக ஆய்வு செய்யும் அதே நேரத்தில் சோதனை பாலர் பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கலாம். சோதனை பாலர் பள்ளியில் வழக்கமான பாலர் பள்ளியைப் போல விளையாட்டுப் பொருட் களும் கற்பித்தலுக்குத் தேவை யான பொருட்களும் உள்ளன.
அவை மட்டுமல்லாது, பாலர் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி கற்றுக்கொள்ள 'பார்கோட்' உள்ள விளையாட்டு பொருட்கள் போன்ற தொழில்நுட்ப விளை யாட்டுப் பொருட்களும் சோத னைப் பாலர் பள்ளியில் உள்ளன. இந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் வரை உள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். இந்தப் பள்ளி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
சோதனை பாலர் பள்ளியை நேற்று பார்வையிட்ட அதிபர் டோனி டான் கெங் யாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்