சுடச் சுடச் செய்திகள்

என்டியு தலைவராக அமெரிக்க விஞ்ஞானி சுப்ரா சுரேஷ் நியமனம்

அமெரிக்காவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழும் திரு சுப்ரா சுரேஷ், 61 (படம்), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) நான்காவது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தாம் பதவியில் இருந்த போது அந்நாட்டின் தேசிய அறிவியல் அறநிறுவனத்தின் இயக்குநராகத் திரு சுப்ரா சுரேஷைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் திரு சுரேஷ், கடைசியாக கணினி அறிவியல், பொறியியல் கல்விக்கும் ஆய்வுக்கும் அனைத்துலக அளவில் பெயர் பெற்ற பிட்ஸ்பர்க் கார்னெகி மெலன் பல் கலைக்கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார். அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப் படும் திரு சுரேஷ் 2013ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தேசிய மருத்துவப் பயிலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட் டார். அத்துடன், தேசிய அறிவியல் பயிலகம், தேசிய பொறியியல் பயி லகம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

இதன்மூலம், அம்மூன்று முக்கியப் பயிலகங்களின் உறுப்பினராகவும் இருந்த 19 அமெரிக்க விஞ்ஞானி களில் ஒருவர் என்ற பெருமை இவரைச் சென்றடைந்தது. உலகப் புகழ்பெற்ற மேசசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் (எம்ஐடி) பொறியியல் துறைத் தலை வராக நியமிக்கப்பட்ட ஆசியாவில் பிறந்த முதல் பேராசிரியரும் இவர் தான். சென்னை ‘ஐஐடி’யில் இளங் கலை பயின்ற இவர், பிறகு ‘எம்ஐடி’யில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அக்கல்வி நிலையத்தின் பொறி யியல் துறைத் தலைவராக இருந்த போது இவர் பல அனைத்துலகத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, மேற் பார்வை செய்தார்.

ஆய்வு, தொழில் நுட்பத்திற்கான சிங்கப்பூர்=எம்ஐடி கூட்டணி (ஸ்மார்ட்) திட்டம் அதில் ஒன்று. ‘கிரியேட்’ எனப்படும் ஆய்வு உன்னத, தொழில்நுட்ப நிறுவன வளாகம் என்ற $1 பில்லியன் மதிப் பிலான முயற்சியால் சிங்கப்பூரில் ஏற் படுத்தப்பட்ட பல அனைத்துலக ஆய்வு மையங்களில் முதலாவது ‘ஸ்மார்ட்’ திட்டம்தான். முன்னதாக, கடந்த 50 ஆண்டு களுக்குள் நிறுவப்பட்ட பல்கலைக் கழகங்களுள் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த இளம் பல்கலைக்கழகமாகத் தேர்வு பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon