சுடச் சுடச் செய்திகள்

சசிகலாவின் சிறை சலுகையை அம்பலப்படுத்திய அதிகாரி ரூபா யார்?

பெங்களூரு: சசிகலாவுக்குப் பெங் களூரு சிறையில் சிறப்புச் சலுகைகள் காட்டப்படுவதாக டிஐஜி ரூபா கிளப்பியுள்ள ஊழல் புகார் மாநிலம் தாண்டி தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி- யுள் ளது. யார் இந்த ரூபா என்று பல்வேறு மட்டத்திலும் பேச்சு எழுந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனைப் பெற்று, பெங்களூரின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள் ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. அவருடன் மற்ற கைதி- களான இளவரசி, சுதாகரன் ஆகி யோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா வுக் குச் சிறைக்குள் தனி கிச்சன் உட்படப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக- வும் இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் ராவ், சசி கலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும், சசி கலாவுக்குச் சலுகைகள் காட்- டப் பட்டதற்கு என்னிடம் ஆதாரங்- கள் உள்ளன என்று அதிர வைத் துள்ளார் சிறைத்துறை அதிகாரி ரூபா. நேர்மையாகச் செயல்படுவது என்பது அதிகாரிகளின் கடமை- களில் ஒன்று என்பதைக் கடை பிடித்து வருபவர் ரூபா. இவரது பெற்றோர்களும் அரசாங்கத்தில் பெரிய பதவி வகித்தவர்கள். அவரின் தங்கை ரோகிணி, ஐஆர்எஸ் அதிகாரியாக பணி யாற்று கிறார். ஐ.பி.எஸ் பணியில் நேர்மையாக செயல் புரிந்ததற்காக பல பரிசுகளை பெற்றுள்ளார் ரூபா. காவல்துறை அதிகாரம் என் பதை, அதிகார வர்க்கத்- தினருக்கு அடிபணிவதை ரூபா எப்போதும் விரும்பியதில்லை. கடந்த 2007ம் ஆண்டு தற்போது மத்திய அமைச்சராக உள்ள உமா பாரதி, ஹூப்ளி மாநகரத்துக்கு வந்தால் கலவரம் வெடிக்கும் என்கிற பதற்ற நிலை இருந்து வந்தது.

உமாபாரதியைத் தடுத்து நிறுத்த பயந்த பல்வேறு அதிகாரிகளுக்கு மத்தியில் உமாபாரதி ஹூப்ளிக்கு வந்ததும் அவரை கைது செய்தார். முதல்வர் எடியூரப்பாவுக்கு அதிகப்படியான காவல் சேவைகள் வழங்கப்படுகின்றன; இது தேவையில்லாத செலவு எனக்கூறி பாதுகாப்பு வாகனங்களையும் காவல்துறை அதிகாரிகளையும் குறைத்தார். ரூபா பெங்களூரு துணை ஆணையாளராக இருந்தபோது, முக்கிய பிரமுகர்களுக்கும் அரசி- யல் பிரபலங்களுக்கும் தேவையில்- லாமல் அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பை மீட்பு பெற்றார். இதில் அரசியல்வாதி- களின் எதிர்ப்பை ரூபா பெற்றார். அண்மையில் மைசூரு குடகு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். கர்நாடக மாநில ஐபிஎஸ் மூத்த அதிகாரிகள் தொடர்பாக நடந்த அந்த வாதம் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தன்னை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுபவர் ரூபா. அடிக்கடி அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள் பல பெற் றுள்ளார். ‘மிஸ் தாவனகரே’ பட்டத்தையும் பெற்றுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon