சப்பாத்தியை வட்டமாக சுடாததால் மனைவியைக் கொன்ற கணவன்

ஜஹாங்கிர்புரி: வட்டமாக, சரியான வடிவில் சப்பாத்தியைச் செய்து தராததால் தனது 4 மாத கர்ப்பிணி மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சப்பாத்தி வட்ட வடிவில் இல்லாததால் 4 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி மிதித்துள்ளார் கணவன். இந்தப் பிரச்சினையைத் தடுக்க வந்த அவர்களின் முதல் குழந்தையை அறை ஒன்றில் போட்டு பூட்டிவிட்டு தன் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட ஆடவரை போலிசார் தேடி வருகின்றனர். போலிசாரிடம் சண்டை குறித்து குழந்தை இப்படி விளக்கம் அளித்துள்ளது.