‘டிப்தீரியா’ கட்டுப்படுத்தப்பட்டது பங்ளாதேஷ் கட்டுமான ஊழியர்

ஒருவரின் உயிரைக் குடித்த ‘டிப்தீரியா’ எனும் தொண்டை அழற்சி நோய்த்தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சுகாதார அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அந்த 21 வயது ஊழியர் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். தொண்டை அழற்சி நோயால் சிங்கப்பூரில் ஒருவர் உயிரிழந்தது கடந்த 25 ஆண்டு களில் இதுவே முதன்முறை. இந்த நிலையில், யீ‌ஷுன் அவென்யூ 7ல் அமைந்துள்ள தங்குவிடுதியில் அந்த ஊழிய ருடன் தங்கியிருந்தோர், தேபான் கார்டன்சில் உடன் வேலை செய் தோர் என அவரது நெருங்கிய கூட்டாளிகள் 48 பேரையும் கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சு பரிசோதித்தது. அதில் அவர்களில் யாரும் தொண்டை அழற்சியால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானது.

“இம்மாதம் 3ஆம் தேதியில் இருந்து தொண்டை எரிச்சலால் பாதிக்கப்பட்டு, கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவரது நெருக்கமான கூட்டாளிகள் இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். இதர 46 பேரும் நல்ல உடல் நிலையுடன் உள்ளனர். அத்துடன், அந்த 48 பேருக்கும் தடுப்பு மருந்து தரப்பட்டதுடன் கூடுதல் தொண்டை அழற்சி தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது,” என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. ‘டிப்தீரியா’வால் பாதிக்கப் பட்டோருக்கு முதலில் சளிச் சவ்வுகளில் அழற்சி ஏற்படும். பின் அது இதயத்தையும் நரம்பு மண்டலத்தையும் பாதித்து, உயி ரையே பறிக்கக்கூடும். இந்நோய்க்கான சிகிச்சையில் தொண்டை அழற்சி நச்சுமுறிப் பானும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்தும் கொடுக்கப்படும். சென்ற மாதம் 30ஆம் தேதி காய்ச்சலாலும் கழுத்து வீக்கத் தாலும் பாதிக்கப்பட்டார் அந்த பங்ளாதேஷ் ஊழியர்.

பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும், ஐந்து நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிங்கப்பூரில் ‘டிப்தீரியா’ ஏற்படு வது அரிது என்றும் அந்நோய்த் தொற்று பரவுவதற்குச் சாத்தியம் குறைவு என்றும் சுகாதார அமைச்சு கூறியது. ஏனெனில், தேசிய குழந்தைப்பருவ நோய்த் தடுப்புத் திட்டத்தின்கீழ் கட்டாய மாக ‘டிப்தீரியா’ தடுப்பூசி போட வேண்டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon