வயிற்றில் கஞ்சா பொட்டலம் கடத்தல்

தேனி: கஞ்சா பொட்டலத்தை வயிற்றில் கட்டி கடத்திய தேனி வியாபாரி கேரள மாநிலத்தில் கைது செய்யப் பட்டார். கஞ்சா வியாபாரி மொக்க ராஜ் என்பவர் யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக தனது வயிற்றில் கஞ்சா பொட் டலத்தை தேனியில் இருந்து தென்காசி வழியாக கேரளா விற்கு பேருந்தில் கட்டி கடத்திச் சென்றுள்ளார். ஆரியங்காவு பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வயிற் றில் கஞ்சா பொட்டலத்தை கட்டி மறைத்து எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த காவல்துறையினர் 1 கிலோ 750 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தேனியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி மொக்கராஜ். படம்: ஊடகம்