மாரடைப்பு; மெதுவோட்டக்காரர் கீழே விழுந்து மரணம்

சிங்கப்பூர் ஐலண்ட் கண்ட்ரி கிளப்புக்கு அருகே மெக்ரிட்சி இயற்கை வளப் பாதையில் 50க்கும் அதிக வயதுள்ள மெதுவோட்டக் காரர் ஒருவர் விழுந்து கிடந்தார். அவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டதாகவும் அவர் பின்னர் மருத்துவமனையில் மாண்டுவிட்ட தகாவும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளுக்குத் தெரிய வந் தது. இதன் தொடர்பில் தனக்கு சனிக்கிழமை முற்பகல் சுமார் 11.05 மணிக்குத் தகவல் வந்த தாகவும் தான் உடனே மருத்துவ வண்டியையும் தீயணைப்பு வாக னத்தையும் அங்கு அனுப்பியதாக வும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக படையின் பேச்சாளர் கூறினார். இதற்கிடையே, தாம் மெது வோட்டம் ஓடி முடிக்கவிருந்த நிலையில் அந்த ஆடவரை தரை யில் பார்த்ததாக பேட்ரிக் யாப் என்ற வேறொரு மொதுவோட்டக் காரர் தெரிவித்தார். எதிர்த்திசையில் மெதுவோட்டம் செய்துகொண்டிருந்த தாம் அந்த ஆடவருக்கு என்ன ஆயிற்று என்று கவனித்தபோது அவரிட மிருந்து எந்த உணர்வும் வெளிப் படவில்லை என்றார் திரு யாப். கீழே விழுந்து கிடந்த ஆட வரிடம் கார் சாவிகள் மட்டும் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மருத்துவ வண்டி வந்து சேர்ந்த போது அவர் சுயநினைவின்றி இருந்ததாகச் சொன்னார். இதய ஓட்டம் நின்றுவிட்டதால் சிபிஆர் என்னும் இதய இயக்க மீட்பு முதலுதவியைத் தம்மால் செய்ய இயலாமற்போனதாக அவர் குறிப்பிட்டார்.

Loading...
Load next