சுங்க வரி செலுத்தாத சிகரெட்டுகள்: ஆடவருக்கு 17 மாதச் சிறை

$85,550 மதிப்புள்ள வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காக 21 வயது இந்தோனீசிய ஆடவருக்கு நேற்று 17 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 700க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டி களில் இருந்த சிகரெட்டுகள் இரு வாரங்களுக்கு முன்பு நடந்த அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்டன. மேலும், அவை $6,230 மதிப்புள்ள பொருள் சேவை வரி செலுத்தப்படாதவை. இம்மாதம் 5ஆம் தேதி சிங்கப்பூர் சுங்கத் துறையினர் கேலாங் சிராய் சந்தைக்குப் பொருட்கள் கொண்டு வந்த லாரியை சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். சுர்யாடி மேமேட் என்ற ஆடவர் சிகரெட்டுகள் அடங்கிய பெட்டிகளைப் பெற்றுக்கொள்ள காத்திருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டனர்.

சோதனையில் 706 அட்டைப் பெட்டிகளில் 1,445 பாக் கெட்டுகள் வரி செலுத்தாத சிகரெட்டுகள் வாழை இலை களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த சிகரெட்டுகளை உணவுப் பொருள் என்ற பெயரில் ஓர் உள்ளூர் நிறுவனம் பெற்றுக் கொண்டது. வேறு ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தப் பொருட்கள் தங்களு டையது என்றும் இறக்குமதி செய்த அதே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அந்த உள்ளூர் நிறுவனமும் தற்சமயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஷங்காய் நகரிலுள்ள ஷாங்ஜியாங் அனைத்துலக புத்தாக்கத் துறை முகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மனித இயந்திரத்தை இயக்கியப் பார்க்கிறார். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

26 May 2019

ஹெங்: சவால்களைச் சமாளிக்க தொழில்நுட்பம்