கல்வி அமைச்சின் 13 புதிய பாலர் பள்ளிகள்

2020ஆம் ஆண்டுக்குள் கல்வி அமைச்சு புதிதாக 13 பாலர் பள்ளி களைத் திறக்க உள்ளது. இவற்றில் ஏழு பள்ளிகள் 2019ஆம் ஆண்டிலும் எஞ்சிய ஆறு பள்ளிகள் 2020ஆம் ஆண்டிலும் தொடங்கப்படும் என்ற தகவலை நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கல்வி அமைச்சு பகிர்ந்துகொண்டது. மேலும், பாலர் பள்ளி சேவைகளுக்கு அதிக தேவையுள்ள இடங்களில் இந்தப் புதிய பள்ளிகள் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தேசிய தின பேரணி உரையில் புதிய பாலர் பள்ளி நடவடிக்கைகளை முதன் முதலாக அறிவித்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டதைப்போல கல்வி அமைச்சின் மூன்று புதிய பாலர் பள்ளிகள் அடுத்த ஆண்டு பொங் கோலில் திறக்கப்பட உள்ளன. வரும் 2023ஆம் ஆண்டுவாக்கில் ஐந்து மற்றும் ஆறு வயது நிரம்பிய குழந்தைகளில் ஐவரில் ஒருவர் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் இடம் பெறுவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon