சுடச் சுடச் செய்திகள்

சாங்கி கடற்கரைப் பூங்காவில் முதலை

சாங்கி கடற்கரைப் பூங்கா பகுதியில் முதலை தென்பட்டதை அடுத்து அங்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டுள் ளன. சாங்கி பயணிகள் படகு முனை யத்தில் குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரியாகப் பணியாற் றும் திரு யுசைனி அப்துல் ரஹீம், 41, கடந்த திங்கட்கிழமை சுற்றுக் காவலில் இருந்தபோது ஒரு முதலையைக் கண்டார். உடனடியாக, தேசிய பூங்காக் கழகம் மற்றும் வேளாண் உணவு கால்நடை மருத்துவ ஆணையத் தைத் தொடர்புகொண்டு அவர் தான் முதலையைக் கண்டது பற்றித் தகவல் தெரிவித்தார். அதன்பிறகு, நேற்று முன் தினம் மறுபடியும் முதலையைக் கண்ட அவர், சில படங்களையும் காணொளிகளையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். ‘சாங்கி கடற்கரையில் நீந்த வேண்டாம்’ என்ற எச்சரிக் கையுடன் இடம்பெற்ற அப்பதிவு 7,000க்கும் மேற்பட்டவர்களால் பகிரப்பட்டுள்ளது.

“அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை எச்சரிப்பதே எனது முதல் கடமை யாக இருந்தது,” என்றார் திரு யுசைனி. தான் கண்டது இம்மாதத் தொடக்கத்தில் பாசிர் ரிஸ் பூங் காவில் காணப்பட்ட அதே முத லையாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். சுங்கை புலோ சதுப்புநிலம் போன்ற வடமேற்குப் பகுதிகளில் முதலைகள் தென்படுவது வழக் கம்தான். என்றாலும், வடகிழக்கு சிங்கப்பூரில் முதலை தென்படு வது அரிதான ஒன்று. பாசிர் ரிஸ் பூங்காவில் முதலை தென்பட்டதை அடுத்து, நிலை மையைக் கண்காணித்து வருவ தாகவும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் அது புகுமானால் அதைப் பிடிக்க தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்து இருந்தது. முதலையைப் பார்த்தால் அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுமாறு பூங்காக் கழகம் பொது மக்களை கேட்டுக்கொண்டது. முதலைக்கு அருகில் செல்லவோ, அதைச் சீண்டவோ அதற்கு உணவு கொடுக்கவோ கூடாது என்றும் உதவிக்கு பூங்காக் கழகத்தில் 1800-471- 7300 என்ற எண்ணில் அழைக்கலாம் என்றும் கழகம் தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon