அந்நியச் செலாவணி வழக்கு: அன்வார் இன்று சாட்சியம்

கோலாலம்பூர்: சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், பேங்க் நெகாராவின் அந்நியச் செலாவணி இழப்பு குறித்த விசாரணை நடத்தி வரும் ஆர்சிஐ எனப்படும் அரச ஆணையத்திடம் இன்று வாக்குமூலம் அளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சாட்சிகளின் பட்டியலில் அன்வாரின் பெயர் இருந்தது என்று திரு சிவராசா நேற்று காலை புத்ரா ஜெயாவில் கூறினார். ஆர்சிஐ விசாரணையில் முதல் நாளில் சாட்சியமளித்த பேங்க் நெகாரா முன்னாள் கவர்னர் அப்துல் முராட் காலிட், அந்நியச் செலாவணி விவகாரம் குறித்து அன்வாருக்கு விளக்கமாக எடுத்துரைத்ததாக தெரிவித்தார். அதற்கு அன்வார், அவ்விவகாரம் வெளிவந்தால் தாம் பதவி விலக வேண்டிவரும் என்று குறிப்பிட்டதாகவும் முராட் கூறினார். முராட்டிடமிருந்து தகவலறிந்த அன்வார் அவ்விவகாரம் குறித்து 1993இல் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார் என சிவராசா கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon