அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி; வேகமாக பரவிய ‘மெர்சல்’

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' வரும் தீபாவளிக்குத் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் சுவரொட்டி முதல் சிங்கிள் டிராக், இசை வெளியீடு என்று சாதனை படைத்து வந்த நிலையில், தற்போது அட்லி பிறந்தநாளை முன்னிட்டு 'மெர்சல்' படத்தின் முன்னோட்டமும் வெளியாகி உள்ளது. இதில் அப்பா விஜய், மேஜிக் மேன் விஜய், மருத்துவர் விஜய் அனைவரும் இடம் பெற்றுள்ளனர். நாயகிகள் யாரும் இடம்பெறவில்லை. பட்டித்தொட்டியெல்லாம் பட் டையைக் கிளப்பி வரும் இந்த முன்னோட்டம் வெளிவந்த 6 மணி நேரத்தில் 'அதிக லைக்ஸ்' என உலக சாதனை படைத்துவிட்டது.

விஜய் ரசிகர்களால் ஒரு பக்கம் 'லைக்ஸ்' குவிந்தாலும் மறுபுறம் அஜித் ரசிகர்கள் 'டிஸ்லைக்' செய்ய வேகமாக கிளம்பிவிட்டனர். இதனால் அதிக 'டிஸ்லைக்' பெற்றது என்ற மோசமான பதிவையும் இந்த முன்னோட்டம் செய்து ள்ளது. வெளியான அரை மணி நேரத்தில் 2,90,000 'லைக்கு'களைப் பெற்றாலும் 52 ஆயிரம் 'டிஸ்லைக்கு'களையும் பெற்று விட் டது. நேற்று வரை 147,000 பேர் 'டிஸ்லைக்' செய்துள்ளனர். இதன் மூலம் தமிழ்ச் சினிமாவில் இதுவரை வந்த முன்னோட்டத்தில் அதிகம் பேர் 'டிஸ்லைக்' செய்தது இதைத் தான் எனக் கூறப்படுகின்றது. எது எப்படியோ 'மெர்சல்' முன்னோட்டம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!