முதல்வர் எடப்பாடியை எளிதில் அணுகலாம்: அமைச்சர் மணிகண்டன்

ராமநாதபுரம்: முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்கவேண்டும் என்றால் உயர் அதிகாரிகளிடம் துண்டுச் சீட்டு எழுதிக் கொடுக்க வேண்டியிருந்தது என அமைச்சர் மணிகண்டன் கூறினார். ராமநாதபுரத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிகாரிகள் எப்போது அழைக்கி றார்களோ, அப்போதுதான் ஜெயலலிதாவைப் பார்க்க முடியும் என்றார். ஜெயலலிதாவை விட முதல்வர் எடப்பாடி பழனி சாமியை எளிதாக அணுக முடிவதாகக் குறிப்பிட்ட அவர், நடப்பு அதிமுக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல் படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

“ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது அனைத்து எம்எல்ஏக்களும்  கட்சிக் கட்டுப் பாட்டிற்கும் ஆட்சிக்கும் ஒருபோதும் குந்தகம் விளைவிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். “அதன்படி இந்த அரசுக்கு விசுவாசத்துடனும் மக்களுக்காகவும் பணி யாற்றி வருகிறோம். அதி முக ஆட்சியை யாராலும் அசைத்துப்பார்க்க முடியாது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்,” என்றார் அமைச்சர் மணிகண்டன். டெங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா கவும் அவர் தெரிவித்தார்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon