வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிகளை மீட்ட ஐஏஎஸ் அதிகாரி

காஞ்சிபுரம்: தொடர் மழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் தத்தளிக்கும் நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண்களை யும் குழந்தைகளையும் மீட்டு முகாமிற்கு அனுப்பி வைத்த  ஐஏஎஸ் அதிகாரி அமுதாவைப் பலரும் பாராட்டி உள்ளனர். நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குள்ள பெரும்பாலான குடியி ருப்புகளில் மழைநீர் புகுந்தது.

பல இடங்களில் மழைநீர் இடுப்பளவுக்குத் தேங்கி நின்றது. இதனால் பொதுமக் கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்க நேரிட்டது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எந்த வித மருத்துவ உதவியும் பெற முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா மீட்புக் குழுவினருடன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று, வீடுகளில் முடங்கிக்கிடந்த மக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று ஒவ்வொரு வீட் டிலும் உள்ள குழந்தைகள், கர்ப் பிணிகளைக் கணக்கெடுத்த அவர், பின்னர் பரிசல் மூலம் அவர்களை மீட்டார். 2015ஆம் ஆண்டு வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரி யாக பொறுப்பேற்றிருந்தார் அமுதா. அப்போது தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்க ராணுவத்துடன் களமிறங் கினார். மேலும் அந்தப் பகுதி களில் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளைப் பாரபட்சம் பார்க்கா மல் அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.