சாதனை இளையர்களுக்குத் தங்க விருது

கடந்த வெள்ளிக்கிழமையன்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கிழக்குக் கல்லூரியில் நடைபெற்ற 17வது தேசிய இளையர் சாதனை தங்க விருது நிகழ்ச்சியில் மொத்தம் 180 இளையர்களுக்குத் தங்க விருதுகள் வழங்கப்பட்டன. 1992ஆம் ஆண்டில் தொடங்கிய தேசிய இளையர் சாதனை விருது, கடந்த 25 ஆண்டுகளாக சாதனை படைக்கும் இளையர்களை அடை யாளம் கண்டு வருகிறது. அதிபர் ஹலிமா யாக்கோப், தேசிய இளையர் சாதனை விருது களின் ஆலோசனைக் குழுத் தலைவரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இளையர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் வெளி நாட்டுத் தூதர்கள், சமூகத் தலை வர்கள், பள்ளித் தலைமையா சிரியர்கள், ஆசிரியர்கள், பெற் றோர் முதலியோர் கலந்துகொண் டனர். தேசிய இளையர் சாதனை விருதின் ஆக உயரிய விருதான தங்க விருது, சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் சாகசப் பயணம், உடற்பயிற்சி சார்ந்த பொழுதுபோக்கு, சமூக சேவை, திறன்களை மேம்படுத்துவது போன்ற பிரிவுகளில் தங்கள் திறன்களை உயர்த்த இளையர் களுக்குத் தளம் அமைத்துத் தருகிறது.

ஒற்றைப் பெற்றோரின் வளர்ப்பில் வளர்ந்த 25 வயது ஷர்மிளா கான், தங்க விருது பெற்றவர்களில் ஒருவர். தம்மைப் போன்ற வசதி குறைந்த மாணவர்களுக்குச் சரி யான வழிகாட்டுதலைத் தர வேண்டும் என்பதற்காக அவர் களுக்குக் கணிதம், ஆங்கிலப் பாடங்களைக் கற்றுக்கொடுத்து உதவிக் கரம் நீட்டினார். சிங்கப்பூரில் மட்டுமின்றி இந்தோனீசியாவிலுள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கும் பாடங்களில் உதவி புரிந்த அவருடைய சேவைக்குத் தேசிய இளையர் சாதனை தங்க விருது வழங்கப் பட்டுள்ளது.

சமூக சேவைத் திட்டங்கள், திறன்களை மேம்படுத்தும் வகுப்புகள், சாகச விளையாட்டுகள் எனக் கல்விக்கு அப்பாற்பட்ட பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஷர்மிளாவிற்கும் மேலும் பல இளையர்களுக்கும் தங்க விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 2013ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவியாகப் பயின்றபோது இந்த நடவடிக்கையில் ஈடுபட தொடங்கிய ஷர்மிளா, இவ்வாண்டு அவற்றை முடித்து அவை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார்.

சக மாணவர்களுடன் இணைந்து பிந்தான் கிராமவாசிகளுக்காக அவர்களது படகுகளைப் பழுதுபார்த்து அதில் காய்கறி, பழத் தோட்டங்களை அமைத்த ராகவ் பரத்வாஜ் (நடுவில்). (வலது மேல்படம்) ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், ஊழியர்களிடையே கனிவன்பை மேம்படுத்த திட்டம் ஒன்றைத் தொடங்கிய தஸ்னீம் ஹனிஃபா. (வலது கீழ்படம்) தம்மைப் போன்ற வசதி குறைந்த மாணவர்களுக்கு கணிதம், ஆங்கிலப் பாடங்களைக் கற்பித்த ஷர்மிளா கான். படங்கள்: ராகவ் பரத்வாஜ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!