சிங்கப்பூரில் ‘ஜென்டிங் ட்ரீம்’ சொகுசுக் கப்பல்

ப. பாலசுப்பிரமணியம்

ஆசியாவின் முதல் சொகுசு கப்பலாகக் கருதப்படும் டிரீம் குருசஸின் ‘ஜென்டிங் ட்ரீம்’ அடுத்த ஒராண்டுக்கு சிங்கப் பூரை தன் தளமாக கொண்டு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக் கிறது. 335 மீட்டர் நீளம் கொண்ட ‘ஜென்டிங் ஹாங்காங்’ நிறுவனத் தின் ‘ஜென்டிங் ட்ரீம்’ சொகுசு கப்பலில் மொத்தம் 18 மாடிகள் உள்ளன. சுமார் 3,352 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த சொகுசு கப்பல் சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியா, மலேசியா, தாய் லாந்து, மியன்மார் போன்ற நாடு களுக்குச் செல்லும்.

இந்த சொகுசு கப்பலை சிங்கப்பூருக்கு வரவேற்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மரினா பே உல்லாசக் கப்பல் முனையத்தில் நங்கூரமிடப்பட்ட இக்கப்பலில் செய்தியாளர் கூட்டம் நேற்று நடைபெற்றது. சுற்றுப்பயணிகளை சிங்கப்பூ ருக்கு ஈர்க்கும் நோக்கத்துடன், ஜென்டிங் கப்பல் நிறுவனம் சிங்கப்பூர் பயணத்துறைக் கழ கத்துடனும் சாங்கி விமான நிலையக் குழுமத்துடனும் சேர்ந்து $28 மில்லியன் மதிப்பு உள்ள முத்தரப்புக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள் ளன.

சிங்கப்பூரைத் தளமாக கொண்ட சொகுசுக் கப்பல்களில் ஆகப் பெரியதாக 150,695 ‘டன்’ எடையுள்ள ‘ஜென்டிங் ட்ரீம்’ விளங்குகிறது.