ரசிகர்களிடம் ரஜினிகாந்த்: காலமும் நேரமும் மாறியே தீரும்

சென்னை: சென்னை கோடம்பாக் கத்தில் உள்ள ராகவேந்திரர் கல் யாண மண்டபத்தில் நான்காவது நாளாக நேற்று கோவை ரசிகர் களைச் சந்தித்த நடிகர் ரஜினி காந்த், காலமும் நேரமும் மாறும், மாறியே தீரும் என்று ரசிகர்களிடம் தெரிவித்தார். கோயம்புத்தூர் தமக்கு மிகவும் பிடித்த ஊர் என்று கூறிய அவர், "என் குருநாதர்கள் இருக்கிறார் கள். சுவாமி சச்சிதானாந்தரின் ஆசிரமம் இருக்கிறது," என்றார். "ஒரு கட்டத்தில் பழனி சுவாமி களிடம் சிஷ்யனாகச் சேர்ந்த சச்சி தானந்தா பின்னர் இமயமலைக் குச்சென்று சிவானந்த சுவாமி களிடம் தீட்சை வாங்கி சச்சி தானந்த சுவாமிகளானார். பிறகு அவரின் குருநாதர் வழி காட்டுதலின்படி அமெரிக்காவுக் குப் போய் ஆன்மிகமும் தியானமும் பரப்ப அவர் அங்கே சென்றார். "இவர் சொல்லித்தான் 'பாபா' படம் எடுத்தேன். அந்தப் படத்தை அவரும் பார்த்தார். அவர் மகா சமாதி ஆவதற்கு முன்னதாக கடைசியாக அவரைப் பார்த்தது நான்தான். இதுவொரு பாக்கியம் எனக்கு," என்று ரஜினி சொன் னார்.

"ஒருமுறை நண்பரின் இல்லத் திருமணம். சிவாஜி சார், நான் எனப் பலரும் விமானத்தில் சென்று கோவை விமான நிலையத் தில் இறங்கினோம். அங்கே என் னைப் பார்த்ததும் ஏகப்பட்ட கூட் டம். என் பேரைச் சொல்லி, வாழ்க வாழ்க என்று முழக்கம் போட்டபடி முன்னே வருகின்றனர். எனக்கோ தயக்கம். கூச்சம். பக்கத்தில் எவ் வளவு பெரிய மேதை இருக்கிறார். அவர் இருக்கும் போது என் பெயரைச் சொல்லி வாழ்க என முழக்கம் போட்டால் எப்படி இருக் கும் எனக்கு. இதையெல்லாம் பார்த்த சிவாஜி சார், 'என்னடா... என்னடா நழுவுறே. இது உன் காலம்டா. உன்னோட காலம். நல்ல படங்களா கொடுடா. வாடா... முன்னே வாடா' என்று அழைத்துக் கொண்டு பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். "மேலும் எம்ஜிஆருக்கும் இன்றைக்கும் இவ்வளவு மதிப்பு இருப்பதற்கு அவரின் குணங்களே காரணம்.

"அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து அதே கோவைக்கு வந் தேன். அப்போது விமான நிலையத் தில் கூட்டம். என்னிடம் வந்து, 'சார்... அந்த நடிகர் வந்திருக் கிறார். அவருக்கு ரசிகர்கள் அதிகம். "அதனால் கொஞ்சநேரம் பொறுத்திருங்கள். அவர் போன தும் போய்விடலாம் என்றார்கள். "நான் சிவாஜி சார் சொன்னதை நினைத்துக்கொண்டேன். இது, அந்த நடிகருடைய காலம். இப்படி காலமும் நேரமும் மாறும். அது சினிமாவாகட்டும் அரசியலா கட்டும் காலமும் நேரமும் மாறியே தீரும்," என்றார் ரஜினிகாந்த்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!