கணவன் கொடுமை: நீதி கேட்கும் மும்பை பெண்

மும்பை: மும்பையைச் சேர்ந்த அமிதா கவுர் என்ற பெண், டுவிட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அசோக் பண்டிட் என்ற தயாரிப்பாளரால் இந்தக் காணொளி எடுக்கப் பட்டுள்ளது. அந்தக் காணொளியில் நீதி கேட்டு அழும் அமிதா கவுர், தனது குழந்தை களுக்காகவே தான் உயிர் வாழ்வதாகவும் தனக்கு எந்த உதவியும் கைபேசி வியாபாரியான தனது கணவர் செய்யவில்லை என்றும் கூறுகிறார். நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் என் கணவரால் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளேன். என்னை என் கணவர் பல ஆண்டுகளாகக் கொடு மைப்படுத்தி வந்துள்ளார்.

எனது குழந்தைகளுக் காகவே இவற்றை எல்லாம் நான் சகித்துக்கொண் டேன். நீதி கிடைக்க வில்லை என்றால் நான் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்வேன். எனக்கு நீதி வழங்குங்கள் என்று அந்தப் பெண் அழுகிறார். இந்தக் காணொளி தொடர்பில் விசாரணை தொடர்வதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon